news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "ஆறு மாதங்கள் ஆட்சி செய்ய விடுவோம்" - மு.க.ஸ்டாலின் உறுதி
tv

Also Watch

tv

Read this

"ஆறு மாதங்கள் ஆட்சி செய்ய விடுவோம்" - மு.க.ஸ்டாலின் உறுதி

ரூ.2500, 6 சிலிண்டர் தருவது சிரமம்

48

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும், ஆறு மாதங்கள் தொந்தரவு செய்யாமல் கவனிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

வேடிக்கை பார்ப்போம்...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
அரசியல் சட்ட சிக்கல் ஏற்படுவதையோ, மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை. தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு அவரை தொந்தரவு செய்யாமல், கவனிப்போம்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பெண்கள் உரிமைத்தொகை, பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டம் போன்ற முக்கிய மக்கள் நலத் திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தவெக அளித்துள்ள சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம்.

ரூ.2,500 தருவது சிரமம்
தவெக தலைவர் விஜய் கூறியிருப்பது போல மகளிருக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் தருவது என்பது மிகவும் சிரமம். குறைந்தபட்சம் 1,000 ரூபாயையாவது தொடர்ந்து தந்து வர வேண்டும். 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைப் பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம். இப்போதும் கூட, செய்ய முடியக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து இருந்தோம். ஆறு இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம், நிறைவேற்றினால் மகிழ்ச்சி.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
திமுக பந்தம் முறிவு, தவெகவுடன் உறவு, காங்கிரஸ் வியூகம் என்ன?

திமுக பந்தம் முறிவு, தவெகவுடன் உறவு, காங்கிரஸ் வியூகம் என்ன?

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 39 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau