news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கார்த்திகா கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
tv

Also Watch

கார்த்திகா கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

’நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்’

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவதை கொள்கைகளை கடந்து வரவேற்காமல், கைது செய்து அச்சுறுத்துவதன் மூலம் தவெக அரசு எதைச் சாதிக்கப் போகிறது? என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திமுகவை விமர்சித்தபோதும் கொள்கை வழிநின்று பதிலளித்தோமே தவிர, பெண் தலைவர்களை சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட்டதில்லை என்றும் கூறி உள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தலில்...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?

திமுக மீதும் விமர்சனம்
கடந்த காலங்களில் கார்த்திகா, தி.மு.க.வையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழி நின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.

இடைத்தேர்தலில் துஷ்பிரயோகம்
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு, அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.

ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள்.

த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

போதை மருந்து கடத்தல் வழக்கில்...
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசை திருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது.

மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொ* மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணை போனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

பாஜக... தவெக...
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க. உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.

கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
செய்தியாளர்களுக்கு மிரட்டல் - உதயநிதி கண்டனம்

செய்தியாளர்களுக்கு மிரட்டல் - உதயநிதி கண்டனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாய் திறப்பாரா முதல்வர்? என இபிஎஸ் கேள்வி

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved