news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மரகதம் குமரவேல், சத்யபாமா பதவி ஏற்பு
tv

Also Watch

மரகதம் குமரவேல், சத்யபாமா பதவி ஏற்பு

அமைச்சர்கள் வாழ்த்து

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய இருவரும் எம்எல்ஏக்களாக இன்று, அக்டோபர் 12ஆம் தேதி பதவி ஏற்று கொண்டனர்.

ஆறு எம்எல்ஏக்கள்...
2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை அமைத்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், அதிமுக சார்பில், வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

மீண்டும் போட்டி
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மற்ற தொகுதிகளில் தேர்தல் வழக்கு நடைபெறுவதால், இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்துக்கு வந்த சத்யபாமா - தாராபுரம், மரகதம் குமரவேல் - மதுராந்தகம் ஆகியோர் மீண்டும் களம் கண்டனர்.

சுற்றிச் சுழன்ற முதல்வர் விஜய்
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றிக்காக, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், கிராமம் கிராமமாக சாலை வலம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலுமே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. தாராபுரத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமா வெற்றி பெற்றார்.

3ஆவது முறையாக வெற்றி
மதுராந்தகம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 3ஆவது முறையாக, இந்த தொகுதியில், மரகதம் வெற்றி வாகை சூடினார்.

பதவி ஏற்பு, அமைச்சர்கள் வாழ்த்து
இந்த நிலையில் சத்யபாமாவும் மரகதம் குமரவேலும் தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழ் உடன் தலைமைச் செயலகத்துக்கு வந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னர், எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன், முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதிய எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் மூலம், தமிழக சட்டப்பேரவையில், தவெக எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.

Related Link
இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வெற்றி என முதல்வர் பெருமிதம்

இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வெற்றி என முதல்வர் பெருமிதம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜயின் கோரிக்கைகளும் மோடியின் உறுதியும்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved