news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிம்பொனியில் இசை ராஜாங்கம், திரையிசையில் ஒலித்த பாடல்கள்
tv

Also Watch

tv

Read this

சிம்பொனியில் இசை ராஜாங்கம், திரையிசையில் ஒலித்த பாடல்கள்

இசைஞானியின் மாயாஜாலம்

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிம்பொனி இசையில் சாதனை படைத்து வரும் இசைஞானி இளையராஜா இன்று தமது 83ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

முடிசூடா ராஜா
தமிழ்த் திரையிசை உலகில் முடிசூடா ராஜாவாக இசை ராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜா, சிம்பொனி இசை என, நாம் அறியாத காலத்திலேயே, தமிழ் ரசிகர்களுக்கு சிம்பொனி இசையை திரையிசை பாடல்கள் மூலம் கொடுத்து நம்மை ரசிக்க வைத்து உள்ளார். இன்று நாம் கேட்டு மெய்சிலிர்க்கும் அவரது பல பாடல்களில் சிம்பொனி இசைக் கோர்வையில் இசையமைத்த பாடல்கள், காலத்தை வென்றவை.

அன்னக்கிளி முதல்...
1976ஆம் ஆண்டில் வெளியான ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தமது பாடலுக்கு அடிமையாக்கிய ராகதேவனின் மாயாஜாலம் 50 ஆண்டுகளை கடந்து செல்கிறது. மண்ணிசை முதல் மேற்கத்திய இசை வரை மெட்டுக்கு இசையமைத்து, காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை பிரசவித்த இளையராஜா, ஒவ்வொரு பாடல்களிலும் புதுமை செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான்.

திரையிசை பாடல்களில் புதுமையை புகுத்திய மேஸ்ட்ரோ
மேற்கத்திய கிளாசிக்கல் மியூசிக் என அழைக்கப்படும் சிம்பொனி இசையை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படைப்பான புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பார் இளையராஜா.

ஆஸ்திரிய கம்போஸர் பீட்டர் சூஃபெர்ட்டின் சிம்பொனி மெட்டில் பாடல்
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரியா கம்போஷர் பீட்டர் சூஃபெர்ட்டின் Peter Schubert சிம்பொனி இசையை தழுவி இதயம் போகுதே... என்ற பாடலுக்கு இசையமைத்திருப்பார் ராகதேவன் இளையராஜா.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த டுவோராக்கின் உலகப் புகழ்பெற்ற ஃப்ரம் தி நியூ வேர்ல்ட் சிம்பொனி-9 (From the new world) இசைக் குறிப்பின் 3ஆவது பகுதியை தழுவி தமது தனித்துவமான கற்பனையுடன் மாற்றி, முற்றிலும் மாறுபட்ட ஒரு மென்மையான மெலடி பாடலை உருவாக்கி, "சின்ன வீடு" திரைப்படத்தில் வழங்கியிருப்பார் நம்ம ராகதேவன் இளையராஜா.

1990ஆம் ஆண்டில் வெளியான கிழக்கு வாசல் திரைப்படத்தில் இடம்பெற்ற வீட்டுக்கு வீட்டுக்கு வாசல்படி வேண்டும்... என்ற பாடலில் மொஸார்த்தின் 25வது சிம்பொனியின் ஒரு பீஸை பயன்படுத்தி அப்பாடலையும் அவரே பாடி, நம்மை ஆட்டம் போட வைத்திருப்பார் மேஸ்ட்ரோ.

முரட்டுக்காளை திரைப்படத்தில் கிளாசிக்கல் கிடார் பீஸ்
மேற்கத்திய இசை ஆளுமைகளின் பல்வேறு பாடல்களை தழுவி, மண்மனம் மாறாமல் ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்து வரும் இசைஞானி, ஸ்பானிஷ் மியூசிக் கம்போஷரான ஆண்டோனியோ ரியூஷ் பைபோவின் (Antonio Ruiz Pipo) வெஸ்டர்ன் கிளாசிக்கல் கிடார் பீஸசை பயன்படுத்தி ’முரட்டுக்காளை’ திரைப்பட பாடலுக்கு இசை அமைத்திருப்பார்.

ரசிகனின் ரசனைக்கு ஏற்ப இசை விருந்து
இந்த பூமி பந்தில் உள்ள எல்லாவிதமான இசை நுட்பங்களையும் தேடி கண்டுபிடித்து தமது ரசிகனின் ரசனைக்கு ஏற்ப இசை விருந்து படைத்து வரும் இந்த பண்ணைபுரத்து ராசய்யாவுக்கு தாலாட்டு நாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி அடைவோம்.


Related Link
”சிக்மா” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

”சிக்மா” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

14
15 hrs 8 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau