news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தேர்தல் திருவிழாவின் புதிய முயற்சி
tv

Also Watch

tv

Read this

தேர்தல் திருவிழாவின் புதிய முயற்சி

News Tamil Therthal Song

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் திருவிழாவின் புதிய முயற்சி

நியூஸ் தமிழின் தேர்தல் பாடல்

News Tamil Therthal Song

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், நியூஸ் தமிழின் தேர்தல் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
5 மாநில தேர்தல் முடிவுகள் - நாளை அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களை அடுத்து ஆளப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 5 மாநில மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தேர்தல் முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் அறிவிக்கப்படுகின்றன.

அண்ணா ஆரம்பித்த கட்சி ஆட்சியை தொடருமா?
கடந்த 50 ஆண்டுகளில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை என்ற கூற்றை உடைப்பாரா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்?
கருத்துக் கணிப்புகள், அரசின் சாதனைத் திட்டங்களை நம்பி நம்பிக்கையோடு உடன்பிறப்புகள் காத்திருக்கின்றனர்.

அண்ணா பெயரிலான கட்சி ஆட்சி அமைக்குமா?
தொடர் தோல்வி என்ற விமர்சனங்களை தவிடு பொடியாக்கி மீண்டும் அரியணையில் அமருமா அதிமுக? எடப்பாடி பழனிசாமி எனும் நான் என்ற குரல், நிச்சயம் ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கின்றனர்.

1967 அண்ணா போல வெல்வாரா விஜய்?
தேர்தலில் இருவருக்கு இடையே தான் போட்டியே, ஒன்னு TVK, இன்னொன்னு DMK என்ற விஜயின் பரப்புரையை ஏற்றார்களா தமிழ் மக்கள்?
உங்க விஜய் நான் வர்றேன், என்ற பரப்புரை பாடல் உண்மையாகும் என்ற மகிழ்ச்சியில் நண்பா.. நண்பிகள் காத்திருக்கின்றனர்.

அண்ணனின் ஆட்சிக்காக ஆவலுடன் தம்பிகள்
கட்சி தொடங்கியது முதல் கூட்டணியே வைக்காமல் களம் கண்டு வரும் நாம் தமிழர் கட்சி நாட்டை ஆளுமா? மொழி, இனம், மண், வளம் என்பதையே அடிநாதமாக பேசி வரும் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் என அடித்துச் சொல்லும் தம்பிகளும் காத்திருக்கின்றனர்.

Related Link
விஜய், தவெக-வால் சுழலும் அறிவாலய கூட்டணி

விஜய், தவெக-வால் சுழலும் அறிவாலய கூட்டணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக அரசின் ஊழலை சாடிய பிரபலம், தொடரும் பதிவுகள்

9
25 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau