news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 1,000 MW அளவுக்கு மட்டுமே மின்சாரம் கொள்முதல் என நிர்மல்குமார் விளக்கம்
tv

Also Watch

1,000 MW அளவுக்கு மட்டுமே மின்சாரம் கொள்முதல் என நிர்மல்குமார் விளக்கம்

திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கண்டனம்

52

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கண்டனம்

பீக்ஹவரில் 1,000 மெகா வாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறி உள்ளார்.
மின்சார கொள்முதல் குறித்து திமுக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்ததுடன், வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்வதால் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் எதிர்கட்சிகள் கூறுவது அரைவேக்காட்டுத்தனமானது எனவும் ஆவேசம் தெரிவித்து உள்ளார்.

திமுக செயல்படுத்தவில்லை

இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது;
பெரும்பாலான மாநிலங்கள் 30 ரூபாய்க்கும் அதிகமாகத் தான் கொள்முதல் செய்கின்றன. மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் ஊழல் செய்ய வழிவகையில்லை, உப்பூரில் மின் உற்பத்தி செய்ய 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்த திமுக, அதனை செயல்படுத்தவில்லை.

அரைவேக்காட்டுத்தனமானது...
21,000 மெகாவாட் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவே மின் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பது அரைவேக்காட்டுத்தனமானது. உப்பூர் மின் உற்பத்தி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது மிகப்பெரிய குற்றம்.

மின் வாரியத்தில் 2013ஆம் ஆண்டு தான் நீண்டகால ஒப்பந்தம் எல்லாம் போடப்பட்டது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு நீண்டகால ஒப்பந்தத்தை தொடங்க உள்ளோம்.

ஆயிரம் மெகாவாட் மட்டுமே
33 முதல் 35 ரூபாய் வரை 1,000 மெகாவாட் அளவுக்குத் தான் கொள்முதல் செய்யவுள்ளோம். நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மின்சாரம் பயன்படுத்தப்படும்.

நமது சொந்த உற்பத்தி 5300 மெகாவாட் தான். தேவையான மின்சாரத்தை வெளியில் இருந்து வாங்குகிறோம். கூடுதலாக செலவு செய்யாவிட்டால், தொழில் நிறுவனங்களுக்கு இதை விட அதிக இழப்பு ஏற்படும். செப்டம்பரில் மின் தேவை அதிகமாக இருந்ததால் மின் நிலையங்களை சீரமைக்க முடியவில்லை.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.

Related Link
திமுக செய்தால் மட்டும் ஊழலா? 
தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

திமுக செய்தால் மட்டும் ஊழலா? தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த ஒரு வார காலம் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

42
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved