news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இனி தினமும் ஊசி போட வேண்டாம், வந்துவிட்டது வாரத்திற்கு 1 இன்சுலின்
tv

Also Watch

இனி தினமும் ஊசி போட வேண்டாம், வந்துவிட்டது வாரத்திற்கு 1 இன்சுலின்

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு...

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு குட் நியூஸ். இனி, தினமும் ஊசி செலுத்த வேண்டிய அவசியமே இல்லை.

ஆமாம், சர்க்கரை நோய் சிகிச்சையில், ஒரு மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. வாரத்துக்கு ஒரே ஒரு ஊசி மட்டும் செலுத்தினால் போதும் என்கிற ஒரு புதிய மருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.

ஆண்டுக்கு 52 ஊசிகள்...
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Novo Nordisk நிறுவனம் "Awiqli" எனும் இன்சுலினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? வழக்கமாக, சர்க்கரை நோயாளிகள் 365 நாளும் தினமும் ஊசி செலுத்த வேண்டும்.

ஆனால், இந்த அவிக்லி இன்சுலின் மூலமாக, ஆண்டுக்கு வெறும் 52 ஊசிகள் மட்டும் செலுத்தினால் போதும். இது, உடலின் இன்சுலின் அளவை மெதுவாக, சீராக வாரம் முழுக்க கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால், 85% ஊசி செலுத்தும் வலியும், பயமும் குறைகிறது.

ஆனாலும்...
இது யாருக்கெல்லாம் பயன்படும்? முக்கியமாக டைப்-2 (Type-2 Diabetes) சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், ஒரு முக்கியமான விஷயம், நீங்களாக மெடிக்கல் ஷாப் போய் இதனை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஏன் என்றால், இது ஒரு பேசல் இன்சுலின் (Basal Insulin). சர்க்கரை அளவை பொறுத்து, மருத்துவர் எழுதிக் கொடுத்தால் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

விலை எவ்வளவு?
இந்த Awiqli இன்சுலின் ஒரு பேக்கின் விலை, இந்தியாவில் தோராயமாக ₹5,500 முதல் ₹6,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பேனாவிற்குள் (Pen) 300 யூனிட் இன்சுலின் இருக்கும். ஒருமுறை வாங்கினால் பல வாரங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதால், அடிக்கடி மெடிக்கல் ஷாப் செல்லும் வேலை மிச்சமாகும். தினமும் இன்சுலின் ஊசி செலுத்தும் கஷ்டத்தில் இருந்து விடுதலை தரக்கூடிய இந்த புதிய தொழில்நுட்பம், சர்க்கரை நோயாளிகளுக்கு நிம்மதியை தரும்.

கவனம் தேவை...
மற்ற இன்சுலின்களைப் போலவே, இதிலும் ஆரம்பத்தில் லேசான தலைசுற்றல் அல்லது ஊசி செலுத்திய இடத்தில் சிறிய தடிப்பு ஏற்படலாம். யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? என்றால், Type-1 சர்க்கரை நோயாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வாராந்திர இன்சுலின், தற்போதைக்கு முழுமையாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
7 நிமிடங்களில் கேன்சர் செல்களை அழிக்கும் ஊசி?

7 நிமிடங்களில் கேன்சர் செல்களை அழிக்கும் ஊசி?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved