news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "ஜந்தர் மந்தரில் இனி போராட முடியாது"
tv

Also Watch

"ஜந்தர் மந்தரில் இனி போராட முடியாது"

போராட்டக்கள பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டெல்லி ஜந்தர் மந்தரில் இனி எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை, போராடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை டெல்லி காவல்துறை நீக்கியது.

டெல்லியில் இனி 3 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்தலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, ராம்லீலா மைதானம், புராரி மைதானம், CBD மைதானங்களில் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட உள்ளது.

டெல்லி காவல்துறை அறிவிப்பு
ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று டெல்லி காவல் துறை அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு மூன்று புதிய இடங்களின் பட்டியலையும் காவல் துறை வெளியிட்டு உள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள போராட்ட இடத்துக்கு மாற்றாக, போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான தகுந்த இடங்களை ஆராய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்ததாக டெல்லி காவல் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜந்தர்மந்தருக்கு மூடுவிழா
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தும் இடமாக அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள சுற்றறிக்கை, மூன்று புதிய இடங்களையும் பட்டியலிட்டு உள்ளது.

இதன்படி ராம்லீலா மைதானம், புராரி மைதானம், சிபிடி மைதானம் ஆகியன போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.


Related Link
பாஜக, தவெக அரசுக்கு திமுக கண்டனம்

பாஜக, தவெக அரசுக்கு திமுக கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved