Also Watch
Read this
Posted on: Mar 21, 2025 06:29 AM
By: Srini Vasan

தாறுமாறாக ஓட்டி டீக்கடைக்குள் புகுந்த தனியார் ஆம்புலன்ஸ் அலறியடித்து ஓடிய டீக்கடை ஓனர் ...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சிவக்குமார் சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ்ஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே எதிர் திசையில் மதுரையில் இருந்து எஸ்.வி.மங்கலம் நோக்கி சென்ற தனியார் காரின் பின் பகுதியில் மோதி தாறுமாறாக சென்றதில் எதிரே சாலையோரம் வடிவேலு என்பவரது டீக்கடைக்குள் புகுந்து மோதி நின்றுள்ளது.
இதில் வடை,பஜ்ஜி செய்ய வைத்திருந்த கண்ணாடி பெட்டி உடைந்து சிதறியது, டீ போடுவதற்காக வைத்திருந்த சூடாக இருந்த பால் பாத்திரம்,வடை போடுவதற்காக
வைத்திருந்த சூடான எண்ணெய் கடாய் மோதி தூக்கி வீசியதில் அனைத்தும் சிதறியுள்ளது.
நல்வாய்பாக டீக்கடையை நோக்கி தாறுமாறாக ஆம்புலன்ஸ் வருவதை கண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என அருகில் ஓடியதால் உயிர் தப்பியுள்ளார் வடிவேல்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் ஆம்புலன்ஸ் உள்ளே உடைக்காத பீர்பாட்டில், ஸ்டேரிங் முன்பகுதியில்
பட்டாணி கடலை ஊறுகாய் சகல சைடிஸுடன் இருந்துள்ளது.
இதனை கண்ட போலீசார் சிவக்குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved