Also Watch
Read this

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை மக்கள் எளிதாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110இன் கீழ் தமிழக முதல்வர் விஜய் பேசியதாவது;
புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் பதிவுச் சான்றிதழ் digital registration certification,இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் இந்த வசதி ஏற்படுத்தப்படும். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இந்த வசதி மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

டிஜிட்டல் ஆவணங்கள்
போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் “Anywhere Registration /Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும்.

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved