Also Watch
Read this

"காந்தா" படத்திற்காக சைமா சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் பாக்யஸ்ரீ போர்ஸ். துல்கர் சல்மானின் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது
பெங்களூருவில் நடைபெற்ற 14ஆவது SIIMA தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2026 விழாவில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணிப் பிரபலங்கள் பலர், முக்கிய விருதுகளை வென்றுள்ளனர்.

ஆறு விருதுகளை வென்ற டூரிஸ்ட் பேமிலி
இந்த விழாவில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் ஒட்டுமொத்தமாக 6 விருதுகளைக் குவித்து திரையுலகினரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
சிறந்த நடிகராக சசிகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த அறிமுக இயக்குநர் - அபிஷன் ஜீவிந்த்
சிறந்த திரைப்படம் - டூரிஸ்ட் ஃபேமிலி
சிறந்த திரைக்கதை - சிறப்பான கதைக்களத்திற்காக வழங்கப்பட்டது
சிறந்த ஒளிப்பதிவு - சிறந்த காட்சிகளுக்காக தொழில்நுட்ப பிரிவில் வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி இசை - டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் ஆன்மாவாக விளங்கிய இசைக்காக வழங்கப்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved