Also Watch
Read this

இந்தியாவில் ஐபோன் 18 Pro மற்றும் 18 Pro Max விற்பனையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கி உள்ளது. மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அதிகாலையிலேயே ஆப்பிள் ஸ்டோர்களில் குவிந்த வாடிக்கையாளர்கள், ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இந்திய சந்தைகளில்...
ஐபோன் 18 புரோ மற்றும் ஐபோன் புரோ மேக்ஸ், மூன்று வண்ணங்களில், விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி இந்த போனுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது. இதன் விற்பனை இன்று செப்டம்பர் 18ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி உள்ளது. ஐபோன் 18 புரோ - 256 ஜிபி ஸ்டோரேஜ் போனின் விலை இந்தியாவில் ரூ.1,64,900.
ஐபோன் 18 புரோ மேக்ஸ் (256 ஜிபி ஸ்டோரேஜ்) போனின் விலை ரூ.1,79,900.

இதோடு ஏர்பாட்ஸ் 5, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 உள்ளிட்ட சாதனங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
ஸ்மார்ட்போன் காதலர்கள் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் போனான ஐபோன் Duoவும் விற்பனைக்கு வந்து உள்ளது. இதன் 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை இந்தியாவில் ரூ.2,99,900 முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் இருந்தே...
புதிய மாடல் ஐபோன் விற்பனை தொடங்கும் முதல் நாளன்று இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில், ஐபோன் காதலர்கள் அதிகளவில் திரண்டு, வரிசையில் காத்திருந்து வாங்குவது உண்டு. இந்த முறை ஐபோன்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், வழக்கம் போலவே ஐபோன் காதலர்கள், அதிகாலை முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோன்களை வாங்கி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved