news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
tv

Also Watch

tv

Read this

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

தினமும் உயர்வதால் அதிர்ச்சி

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 98 காசுகளுக்கு விற்பனை ஆனது.

6ஆவது முறையாக அதிகரிப்பு
12 நாட்களில் 6ஆவது முறையாக விலை அதிகரித்து, பெட்ரோல் டீசல் விற்பனை ஆனது. கடந்த 15ஆம் தேதிக்குப் பிறகு, மே 25ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 ரூபாய் 50 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை 7 ரூபாய் 60 காசுகளும் உயர்ந்தன.



விலை உயர்வால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
எரிபொருட்களின் தொடர் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில் மேலும் விலைவாசி உயரக்கூடும் என்பதால் உழைக்கும் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.

2 வாரங்களுக்குள்...
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்குள் 4ஆவது முறையாக உயர்த்தப்பட்டது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து, வர்த்தகமாகி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள இறக்குமதி செலவினங்களைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மே 15ஆம் தேதி முதல் விலையேற்றத்தைத் தொடங்கின.

எரிபொருள் விலை உச்சம்
இதனைத் தொடர்ந்து மே 19, மே 23ஆம் தேதிகளில் அடுத்தடுத்து விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது 14 நாட்களுக்குள் நான்காவது முறையாக நேற்றும், அதனை தொடர்ந்து இன்றும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தின. இந்த தொடர் மாற்றங்களால் எரிபொருள் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மே 25
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும் அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய் 77 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயை நெருங்கி 99 ரூபாய் 55 காசுகளுக்கும் விற்பனை ஆனது.

மே 26
சென்னையில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 108 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பெட்ரோலுக்கு இணையாக டீசலின் விலையும் உயர்ந்தது. ஒரு லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து, 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை ஆனது.

மே 27

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 98 காசுகளுக்கு விற்பனை ஆனது.


Related Link
இன்றைய ராசி பலன்கள் 27052026

இன்றைய ராசி பலன்கள் 27052026

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கரைந்து விடும், மன்னிப்பு முக்கியம், அடுத்து என்ன?

1
15 mins agoshare
அதிமுக கரைந்து விடும், மன்னிப்பு முக்கியம், அடுத்து என்ன?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved