news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்
tv

Also Watch

’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியாவின் ஜி.டி.பி. 7.8% வளர்ச்சி

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்

பொதுமக்கள் அவசியமில்லாமல் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு நெருக்கடியான சூழலுக்கு இடையிலும் இந்தியா 7 புள்ளி 8 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தியை எட்டியிருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள் பரப்பி வந்த பொய் அம்பலமாகி இருப்பதாகவும் கூறி உள்ளார்.

அபார வளர்ச்சி
இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறி இருப்பதாவது;
2026-27ஆம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது, இது அபார வளர்ச்சி. சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை கணிச​மாக உயர்ந்து வரு​கிறது. உலக விநி​யோக சங்​கி​லி​யில் பல்​வேறு பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்ளன. இந்த சவால்​களை தாண்டி, இந்​திய மக்​களின் ஒருங்​கிணைந்த நடவடிக்​கைகளால் நாட்​டின் பொருளா​தா​ரம் அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த அபார வளர்ச்சிக்கு இந்திய மக்களின் கூட்டு முயற்சியும், கடின உழைப்புமே காரணம்.

தங்கத்தை வாங்க வேண்டாம்
அவசியமின்றி, தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டாம். இந்தியா அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதால், நாட்டின் டாலர் இருப்பு வெளியேறுகிறது. இதை தவிர்க்க, அவசியமில்லாத பட்சத்தில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆடம்பர திருமணம் வேண்டாம்
ஆடம்பரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் 'டெஸ்டினேஷன் வெடிங்' முறையைத் தவிர்த்து, இந்தியாவிற்குள்ளேயே திருமணங்களை நடத்த வேண்டும். வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டு சுதேசி தயாரிப்புகளையும், 'மேக் இன் இந்தியா' பொருட்களையும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். பொழுதுபோக்கிற்காக இந்திய மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதைக் குறைத்து, உள்நாட்டு சுற்றுலாக்களை ஊக்குவிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
பொருளா​தார வளர்ச்சி குறைந்​தால் வேலை​வாய்ப்​பின்மை அதிகரிக்​கும். தொழிலா​ளர்​களின் ஊதி​யம் குறை​யும். நாடு முழுவதும் வர்த்​தகம் பாதிக்​கப்​படும். தற்​போது, இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உயர்ந்​திருப்​ப​தால் புதிய வேலைவாய்ப்புகள் அதி​கரிக்​கும்.

Related Link
பிற்பகலில் சரிந்தது ஆபரண தங்கத்தின் விலை

பிற்பகலில் சரிந்தது ஆபரண தங்கத்தின் விலை

வளர்ச்சியடைந்த இந்தியா
நாம் எவ்வளவு தூரம் சுதேசி மற்றும் தற்சார்பு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு வேகமாக இந்தியா வளர்ச்சியடையும். நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது 2047ல், இன்றைய இளைஞர்களிடம் ஒரு 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' ஒப்படைப்பதே நமது இலக்கு.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"2029-ல் அரசியல் சூழல் மாறும்; நீட் தேர்வு நீக்கப்படும்"

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved