news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது
tv

Also Watch

tv

Read this

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது

படக்குழு அறிவிப்பு

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173ஆவது படத்திற்கு தர்மன் என பெயரிடப்பட்டு உள்ளது.

தயாரிப்பாளர் கமல்ஹாசன்...
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு 'தர்மன்' என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை முதலில், சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுந்தர் சி படத்தில் இருந்து விலகினார். சுந்தர் சி, நடந்து முடிந்து சட்டப்பேரவை தேர்தல்லில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் யார்?
அதன் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 173ஆவது படத்தை இயக்குவதாக, போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் அவரும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. ’டிராகன்’ படத்துக்குப் பிறகு சிம்புவை வைத்து படம் பண்ண காத்திருந்த அஸ்வத் மாரிமுத்து தற்போது, ரஜினி பட இயக்குநராகி உள்ளார். கமல் தயாரிப்பில், ரஜினியின் 173ஆவது படமான 'தர்மன்' படத்தை இயக்குகிறார்.

பட டைட்டிலில்...
இதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. Rajinikanth’s Thalaivar 173 Titled Dharman and Directed by Ashwath Marimuthu என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிம்ரன், ராக்சி கன்னா உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

1
27 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau