Also Watch
Read this

Indian Premier League 2026 தொடரில் புள்ளிப்பட்டியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி RCB முன்னிலை பிடித்து பிளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தி உள்ளது. மற்ற அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அசத்தும் ஆர்சிபி
ஐபிஎல் 2026 தொடரின் தற்போதைய புள்ளிப்பட்டியலில், RCB அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் GT அணி, 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மூன்றாவது, நான்காவது இடத்தில்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் SRH அணியும் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் RR அணி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து பிளேஆஃப் சுற்றுக்கான, போட்டியில் தொடர்ந்து உள்ளது.
மற்ற அணிகளின் நிலை
பஞ்சாப் கிங்ஸ் PBKS, சென்னை சூப்பர் கிங்ஸ் CSK, டெல்லி கேபிடல்ஸ் DC ஆகிய அணிகள் தலா 12 மற்றும் 13 புள்ளிகளுடன் நடுப்பகுதியில் தங்கி உள்ளன. இவை பிளேஆஃப் வாய்ப்பை உயிரோடு வைத்து உள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR, மும்பை இந்தியன்ஸ் MI, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG ஆகிய அணிகள் கீழ்நிலையில் இருந்தாலும், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மேலே வர வாய்ப்பு உள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கடைசி சில போட்டிகளின் முடிவுகள் அணிகளின் நிலையை தீர்மானிக்கப் போகும் நிலையில், ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்து உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கு எந்த அணிகள் முன்னேறுகின்றன என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved