news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ''விஜய்க்கும் நடிகைக்கும் தொடர்பு''
tv

Also Watch

tv

Read this

''விஜய்க்கும் நடிகைக்கும் தொடர்பு''

நடுத்தெருவில் 28 ஆண்டுகால திருமண பந்தம்

87

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு, அவரது மனைவி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தை நாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கூறியிருக்கும் சங்கீதா, தனது கண்டிப்பை மீறி, விஜய் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக பகீர் கிளப்பியிருக்கிறார். விவாகரத்து மனுவில் விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா கூறியிருக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டும், இருவரது 28 ஆண்டு கால திருமண பந்தத்தை நடுத்தெருவுக்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது.

திருமண உறவில் நம்பிக்கை துரோகம்
நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையே சுமூகமான போக்கு இல்லை என்று, சில ஆண்டுகளாக யூகமாக பேசப்பட்டு வந்தது, தற்போது உண்மையாகி பொது வெளியில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவரான விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுவில் குறிப்பிட்டு இருப்பது கிறுகிறுக்க வைத்துள்ளது. 1998ஆம் ஆண்டு லண்டனில் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் மறு ஆண்டே சென்னையில் வைத்து விஜய், சங்கீதாவுக்கு திருமணம் நடந்த நிலையில், ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விஜய் உடனான திருமண வாழ்க்கை இனிமையாக சென்றதாக குறிப்பிட்டு இருக்கும் சங்கீதா, 2021ஆம் ஆண்டு தான் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பது தமக்கு தெரிய வந்ததாக கூறி, பகீர் கிளப்பியுள்ளார். திருமண உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக திடுக்கிட வைத்துள்ள சங்கீதா, திருமணத்தை மீறிய உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய், அதற்கு பிறகும் திருந்தவே இல்லை என கூறி, அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.

சுமூகமான போக்கு ஏற்படவில்லை
இதுமட்டுமல்லாமல், அடிக்கடி குறிப்பிட்ட நடிகையுடன் வெளிநாடுகளுக்கு விஜய் சென்று வருவதாக கூறி, இடியை இறக்கியிருக்கும் சங்கீதா, அந்த நடிகை சோஷியல் மீடியாவில் பகிரும் புகைப்படம் காரணமாக, குடும்பத்திற்கே கடும் அவமானம் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். விஜய்க்கும், தனக்கும் இடையே ஏற்பட்ட மனக் கசப்பை 2021 செப்டம்பர் மற்றும் 2022 பிப்ரவரி ஆகிய கால கட்டங்களில் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய முயன்றதாகவும், ஆனாலும் சுமூகமான போக்கு ஏற்படவில்லை என்றும் மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

2ஆவது எதிரி - நடிகைக்கு எச்சரிக்கை
அதற்கு பிறகு விஜய் தன்னை ஒதுக்கி வைத்து விட்டதாக கூறியிருக்கும் சங்கீதா, 2021ஆம் ஆண்டில் இருந்து, விஜய்யை பிரிந்து தனியாக தான் வசித்து வருவதாக தெரிவித்து, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதோடு நிற்காமல், தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் தான் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை பொது வெளியில் வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கீதா, விஜய்யிடம் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட நடிகையை மனுவில் 2ஆவது எதிரியாக சேர்க்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேறு வழியில்லாமல்...
அதேபோல, ஆகஸ்ட் 2024 மற்றும் பிப்ரவரி 2025 ஆகிய கால கட்டங்களில் இரு தரப்பிலும் வழக்கறிஞர் மூலமாக பிரச்சனையை சுமூகமாக முடிக்க எண்ணியதாகவும் சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பை அடுத்து, விஜய் தன்னை பொருளாதார ரீதியாக முடக்கி, வெளியில் கூட செல்ல விடாமல் தடுத்து வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்ததாக திகில் கிளப்பியுள்ளார் சங்கீதா. மேலும், பொதுவெளிக்கு வராமல் இருவரும் பிரிந்து வாழ வேண்டும் என முடிவு எடுத்து, ஜீவனாம்சம் குறித்து பேசிய போதும் பிடி கொடுக்காமல் விஜய் புறக்கணித்து வந்ததால், வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடியிருப்பதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.

ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்
ஆகையால், விஜய் உடனான திருமண வாழ்க்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாக கூறியிருக்கும் சங்கீதா, விவகாரத்து கோரியிருப்பதோடு நீலாங்கரை வீட்டிலேயே தன்னை குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், தனக்கும், தனது பிள்ளைகளின் எதிர் காலத்திற்கும் ஏற்றபடி விஜய்யின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆதரவு தளத்தை அசைத்து பார்க்கும்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்த நிலையில், தற்போது மனு மொத்தமாக லீக் ஆகியிருக்கிறது. இந்த விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்றும், அப்போது விஜய் ஆஜராக உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் கட்சி தலைவரான விஜய்யின் குடும்ப விவகாரம் தற்போது பொது வெளியில் விவாதமாக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஏற்கனவே பெண்கள் ஆதரவு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில், அவரது மனைவியான சங்கீதா தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அந்த ஆதரவு தளத்தை அசைத்து பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Related Link
விஜய் மனைவி கொடுத்த CASE-ன் முழு பின்னணி..அடுத்தடுத்து அதிர்ச்சி!

விஜய் மனைவி கொடுத்த CASE-ன் முழு பின்னணி..அடுத்தடுத்து அதிர்ச்சி!

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
6 mins agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved