Also Watch
Read this

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள "சர்தார் - 2" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்
இந்திய உளவாளி பற்றிய கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

"நள்ளிரவு 1 மணியளவில் அஜித் அழைத்து பாராட்டினார்"
"கிளாடியேட்டர்ஸ்" ஆவணப்படத்தின் பின்னணி இசையை கேட்டுவிட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் நடிகர் அஜித் தன்னை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அஜித் தன்னை நிச்சயம் பெருமைப்படுத்துவதாக உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகள் அன்றைய இரவு முழுவதும் தன்னை தூங்க விடாமல் உற்சாகப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

"இயக்குநருக்கு பதில் ஹீரோவாக ஆகி இருந்தால் "டாப்"தான்"
ஜேசன் சஞ்சய் இயக்குநருக்கு பதிலாக நடிப்பை தேர்வு செய்திருந்தால், அறிமுக படத்திலேயே இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்திருப்பார் என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அவர் அளித்த நேர்காணலில், நடிப்புக்கு முன்பாக இயக்குநராக தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே ஜேசன் சஞ்சயின் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved