news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி
tv

Also Watch

tv

Read this

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி

புதிய நீதிக்கட்சி வேட்பாளர்

Posted on: Mar 28, 2026 06:46 AM

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மத்திய தொகுதியில், புதிய நீதிக் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்.

புதிய நீதிக் கட்சியில்...

புதிய நீதி கட்சி சார்பாக, இரட்டை இலை சின்னத்தில் குஷ்பூவின் கணவர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்து உள்ளார். ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் இன்னொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2 தொகுதிகள் ஒதுக்கீடு
இதுகுறித்து ஏ.சி.சண்முகம் கூறி இருப்பதாவது:
எங்கள் கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதியும் , பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று என 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வெற்றி வாய்ப்புக்காக பாடுபடுவேன். மேலும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து, கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்வேன்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறியிருந்தார்.

அதிமுக கூட்டணியில்
இபிஎஸ் தலைமையிலான தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 167 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும், ஐஜேகே 2 தொகுதிகளிலும் புதிய நீதி கட்சி 2 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

வேட்பாளர் சுந்தர் சி

தேசிய ஜனநாயக கூட்டணியில் மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் MaduraiCentralConstituency புதிய நீதி கட்சி சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என ஏ.சி.சண்முகம் தெரிவித்து உள்ளார். அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதிக்கான வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவதாகவும் ஏ.சி.சண்முகம் கூறி உள்ளார்.

Related Link
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குக்கர் சின்னத்தில் போட்டி, தினகரன் உறுதி

3
6 mins agoshare
ttv dinakaran ammkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved