Also Watch
Read this
வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தோட 2ஆவது புரோமோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த 2ஆவது புரோமோ பாடலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபுவின் 'காகங்கள்' படப்பிடிப்பு நிறைவு
ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த 'காகங்கள்' படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் யோகி பாபு பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்திலே படக்குழுவினர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளையும் படப்பிடிப்பு நிறைவையும் ஒன்றாக கொண்டாடி உள்ளனர்.

தற்போது, இந்த படத்தின் டப்பிங், ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

விரைவில் வரும் 'அப்பா குட்டி'
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அப்பா குட்டி' திரைப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். தந்தை, மகள் பாசப் பிணைப்பை மையமாக கொண்ட இந்த படத்தின் அனைத்து தயாரிப்புப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாக தயாராக இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved