news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news டி20 தமிழக வீரர்கள், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு
tv

Also Watch

டி20 தமிழக வீரர்கள், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு

மறக்க முடியாத தருணங்கள்

69

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டி20 உலக கோப்பையில் வெற்றி வாகை சூடிய இந்திய அணியில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு;
தமிழகத்தைச் சேர்ந்த நமது 'சுழல் இரட்டையர்களான' வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருடனான மறக்க முடியாத தருணங்கள். விடாமுயற்சி, கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் செதுக்கப்பட்ட அவர்களின் பயணத்தைப் பற்றி, அவர்களுடன் ஒரு அற்புதமான கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு, இனிவரும் காலங்களில் மேலும் பல வெற்றியைத் தேடித்தரும் பந்துவீச்சுத் தருணங்களும், பெருமைமிக்க தருணங்களும் அமைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தையும், குறிப்பாக சஞ்சு சாம்சனின் பேட்டிங்கையும் அவர் பாராட்டினார். இந்த வெற்றி இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறப்பான மைல்கல் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழக வீரர்களுக்கு வாழ்த்து
மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களைப் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில், டி20 உலக கோப்பையில் வெற்றி வாகை சூடிய இந்திய அணியில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டி, பரிசுகளை வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி விவகாரத்தில் நடந்த ‘பேரம்’ என்ன?

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved