news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 700 ஆண்டுகள் அறிவொளி வீசிய கல்விக்களஞ்சியம், ஆறு மாதம் அணையாமல் தின்றழித்த தீ
tv

Also Watch

700 ஆண்டுகள் அறிவொளி வீசிய கல்விக்களஞ்சியம், ஆறு மாதம் அணையாமல் தின்றழித்த தீ

காலம் கடந்தும் கதை சொல்லும் வரலாற்றுச்சுவடு

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உலகின் பழமையான பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்து, உலகிற்கே அறிவொளி வீசிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளையும், இந்திய எல்லைகளை கடந்து பரவியிருந்த அதன் புகழையும், அந்நியர் படையெடுப்பில் அழிக்கப்பட்ட அறிவுக்களஞ்சியத்தின் வரலாற்றையும் எமது செய்தியாளர் ராஜேஷ் நேரில் சென்று விளக்கியிருக்கிறார். சுமார் 700 ஆண்டு காலம் கோலோச்சிய உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

500 ஆண்டுக்கு முன்னரே
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, ஐரோப்பாவின் போலோக்னா போன்ற உலகின் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களை காட்டிலும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய துணைக்கண்டத்தில் இயங்கி வந்திருக்கிறது ஒரு பிரம்மாண்ட பல்கலைக்கழகம். இந்தியா முழுவதும் குருகுலக் கல்வி முறை வியாபித்திருந்த காலகட்டத்திலேயே உலகம் முழுவதும் அறிவொளி வீசியது தான் நாளந்தா பல்கலைக்கழகம்.

குப்த அரசர்கள்...
பண்டைய காலத்தில் மகதநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய பீகாரின் ராஜ்கிர் பகுதியில் கி.பி. 427ஆம் ஆண்டு, குப்த பேரரசரான முதலாம் குமாரகுப்தரால் நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பௌத்த மடத்தின் கீழ் அமைந்த இந்தப் பல்கலைக்கழகத்தை, இந்து மதத்தை சேர்ந்த குப்த அரசர்கள் பல தலைமுறைகளாக கட்டிக்காத்து கல்வி வளர்த்தது தான் கூடுதல் சுவாரஸ்யம்.

90 லட்சம் புத்தகங்கள்
மகத பேரரசர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய கல்விக்களஞ்சியமாக வளர்ச்சியடைந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில், பௌத்த கொள்கைகள், வேதங்கள், இலக்கணம், மருத்துவம், கணிதம், வானியல், மொழியியல், தத்துவம், தர்க்கம் என தனித்தனியாக பல்வேறு துறைகளில் கல்வி கற்பிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு சுமார் தொண்ணூறு லட்சம் புத்தகங்கள் கொண்ட 3 பிரம்மாண்ட நூலகங்களும் இயங்கி வந்திருக்கிறது.

10 ஆயிரம் மாணவர்கள்
உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமான நாளந்தா, புகழின் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் அங்கு தங்கி படித்திருக்கின்றனர்.

அவர்களுக்கு சுமார் 2 ஆயிரம் பேராசிரியர்கள் கல்வி கற்பித்துள்ளனர். வகுப்பறைகள் மட்டுமின்றி குடியிருப்புகள், விவாத அரங்குகள், சமையல் அறைகள், வழிபாட்டு தலங்கள் என நவீன கால பல்கலைக்கழகங்களுக்கு நிகரான வசதிகளுடன் செயல்பட்ட நாளந்தாவில், நாகார்ஜுனர், ஆர்யதேவர், தர்மபாலர், சீலபத்திரர் போன்ற அறிஞர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

படையெடுப்புகளால்...
புகழ்பெற்ற சீனப் பயணி யுவான்சுவாங், நாளந்தாவில் தங்கி கல்வி பயின்றதுடன், அதன் சிறப்புகள் மற்றும் கல்வி முறை குறித்து வரலாற்றிலும் விரிவாக பதிவு செய்துள்ளார்.

சீனா, கொரியா, ஜப்பான், திபெத், மங்கோலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து மாணவர்களும், அறிஞர்களும் நாளந்தாவுக்கு வந்து தங்கி கல்வி பயின்றுள்ளனர். இவ்வாறாக கி.பி.5ஆம் நூற்றாண்டு முதல் கம்பீரமாக கோலோச்சிய நாளந்தா பல்கலைக்கழகம், கி.பி. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த படையெடுப்புகளால் அந்திமத்தை எட்டியது.

வரலாற்றின் கருப்பு பக்கம்
முகமது கில்ஜியின் படையெடுப்பின் போது, நாளந்தா பல்கலைக்கழகம் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பற்ற வைத்த தீ ஆறு மாத காலம் வரை தொடர்ச்சியாக எரிந்ததாக கூறப்படுகிறது.

தேடித் தேடி பாதுகாத்த அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை தீயின் நாவுகள் தின்றொழித்ததை பார்த்து அறிஞர்களும், மாணவர்களும் ரத்தக்கண்ணீர் வடித்தது வரலாற்றின் கருப்பு பக்கம்.
ஒரு காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்த்து, கல்வியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த நாளந்தா அழிக்கப்பட்டாலும், அதன் அறிவொளியை யாராலும் அழிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட போதும் பல நூற்றாண்டு கால விழுமியங்களை சுமந்தபடி கம்பீரம் குறையாமல் எஞ்சி நிற்கும் அந்த வரலாற்றுச்சுவடு கட்டடங்கள் அழியலாம், ஆனால் அறிவு அழியாது என்பதற்கு அழிக்கமுடியாத சாட்சியாக நிற்கிறது.

Related Link
ஃபீனிக்ஸ் பறவைபோல் சிறகடிக்கும் நாளந்தா, கலாமின் கனவால் எழுந்த விருட்சம்

ஃபீனிக்ஸ் பறவைபோல் சிறகடிக்கும் நாளந்தா, கலாமின் கனவால் எழுந்த விருட்சம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாராபுரத்தில் முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்

52
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved