news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நாப்கின் இல்லை என நடிகை புகார்
tv

Also Watch

நாப்கின் இல்லை என நடிகை புகார்

நடிகை சமந்தாவின் உடற்பயிற்சி வைரல்

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசன் படம் குறித்து நடிகர் சிம்பு நெகிழ்ச்சி

"உங்களுக்கு நான் வாக்குறுதி அளித்தபடி, 'அரசன்' படம் நிச்சயம் சம்பவம் பண்ணும்," என்று நடிகர் சிம்பு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகைக்கு...
அரசன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராத வகையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு 'The World of Arasan' க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளது என்ற தகவலையும் சிம்பு பகிர்ந்து உள்ளார். ’அரசன்' படத்தில் இளம் வயது முதல் வயதான காலம் வரையிலான பயணம் இடம்பெறுகிறது. 5, 6 வித்தியாசமான கெட்-அப்களில் நடிக்கிறேன். அனைவரும் பொங்கல் 2027ல் ‘அரசன்’ வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பொங்கல் வெளியீடாக வரவில்லை. இதுதான் என்னுடைய அப்டேட். உங்களைப் பெருமைப்படுத்தும் ஒரு படத்தை விரைவில் கொடுப்பேன். ‘அரசன்’ படம் சம்பவம் பண்ணும், என்றும் நடிகர் சிம்பு கூறி உள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் இன்று செப்டம்பர் 4ஆம் தேதி, தனது 51ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் காலை முதலே #HBDVetrimaaran என்ற ஹேஷ்டேக்குடன் அவருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். 

‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பு தளத்தில் தானும், இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகர் கென் கருணாஸ் கூறி உள்ளார்.

Old is Gold வையாபுரி சார்
தன்னை பழைய நடிகர் என்றும், தான் இன்ஸ்டா, முகநூலில் இல்லை என்பதை குறிப்பிட்டு இயக்குநர் ஒருவர் நிராகரித்ததாகவும், அதனால் இன்ஸ்டா பக்கத்தை துவங்கிய தனக்கு 1 மாதத்தில் 1 லட்சம் Followers கிடைத்ததாகவும் கண்கலங்கியபடி நடிகர் வையாபுரி வீடியோ வெளியிட்டு உள்ளார். "நான் உங்களின் பெரிய Fan sir, Old is Gold Sir, நீங்க சிறந்த நடிகர் என்று மக்களுக்கு தெரியும் சார்,” என ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்கள், வையாபுரியை நெகிழ வைத்து உள்ளனர்.

நாப்கின் இல்லை
சென்னை விமான நிலையத்தில் நாப்கின் கிடைக்காமல் கடும் சிரமத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக நடிகை லதாராவ் தகவல் தெரிவித்து உள்ளார். ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு, திடீரென மாதவிலக்கு ஏற்பட்டதால் விமான நிலையத்தின் கழிப்பறையில் நாப்கின் வசதி செயல்பாட்டில் இல்லாததால் செய்வதறியாது மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி, நடிகை லதாராவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வைரலாகும் சமந்தா
நடிகை சமந்தா, கர்ப்ப காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. தனது கணவர் ராஜ் நிடிமோருவுடன் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சமந்தா, ஜிம்மில் தனது 'பேபி பம்ப்' தெரியும் படியாக TRX சஸ்பென்ஷன் மற்றும் எடை தூக்கும் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகளை வெளியிட்டு உள்ளார்.

மருத்துவர் முழு அனுமதியோடு மட்டுமே கர்ப்ப காலத்திலும் இதனைத் தொடர்வதாகவும், மருத்தவர் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் இதனை முயற்சிக்க வேண்டாம் என்றும் நடிகை சமந்தா, பதிவிட்டு உள்ளார்.

Related Link
பிறக்கப்போகும் குழந்தைக்கு சமந்தா ரசிகர் வைத்த பெயர்

பிறக்கப்போகும் குழந்தைக்கு சமந்தா ரசிகர் வைத்த பெயர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved