news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ‘துரந்தர் 2’ படக்குழுவுக்கு சிக்கல்
tv

Also Watch

‘துரந்தர் 2’ படக்குழுவுக்கு சிக்கல்

‘துரந்தர்’

60

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
durendher main(1)

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இந்த தொடர்ச்சிப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டை முன்னிட்டு பல படங்கள் தங்களது ரிலீஸ் தேதிகளை மாற்றியுள்ளன.


நிரந்தர தடை விதிக்க கோரிக்கை
இந்த நிலையில், ‘துரந்தர் 2’ படத்தை தயாரித்து வரும் B62 ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. படப்பிடிப்பின் போது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்க மும்பை மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார்
தெற்கு மும்பையில் உள்ள ஒரு கோட்டைப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, அனுமதியின்றி பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்ட இடமாக இருந்ததால், படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இரவு நடைபெற்ற படப்பிடிப்பின்போதும் மீண்டும் விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும்
அந்த இடத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் உள்ளதால், தீ தொடர்பான பொருட்களை பயன்படுத்த தடை இருந்தபோதிலும், படக்குழு அதை மீறியதாக கூறப்படுகிறது. இந்த தொடர்ச்சியான விதிமுறை மீறல்களை காரணமாகக் கொண்டு, தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


தடை அமல்படுத்தப்பட்டால்...
ஒருவேளை இந்த தடை அமல்படுத்தப்பட்டால், மும்பையில் எதிர்காலத்தில் படப்பிடிப்புக்கான அனுமதி பெற அந்த நிறுவனம் இணையவழி விண்ணப்பிக்க கூட முடியாத நிலை ஏற்படும். மேலும், சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு பெரிய தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Link
முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved