news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news போலீஸ் அகாடமியில் முதல்வர் எடுத்த முடிவு, பந்தாடப்பட்ட அதிகாரிகள்
tv

Also Watch

போலீஸ் அகாடமியில் முதல்வர் எடுத்த முடிவு, பந்தாடப்பட்ட அதிகாரிகள்

அடுத்தடுத்த மாற்றத்திற்கும் தயார்

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உள்துறை செயலாளரும், மின்சார வாரியத் தலைவரும் அதிரடியாக மாற்றப்பட்டிருக்காங்க. இது முதல்வரே நேரடியாக போட்ட டிரான்ஸ்ஃபர்ன்னு கோட்டையில பேசிக்கறாங்க. ஒரு சில நாட்கள்ல சில முக்கிய பதவிகள்லயும் மாற்றம் வரப் போகுதாம்.

எதிர்க்கட்சியான, திமுகவோட தலைவர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டுல மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டி நடக்குது,’ன்னு இடைத்தேர்தல் பிரச்சாரம் வரைக்கும் தவெக அரசை கடுமையாக விமர்சிச்சுட்டு வந்தார். இதுதான் இடைத்தேர்தல்ல எதிர்கட்சிகளோட பிரதான குற்றச்சாட்டாவும் இருந்துச்சு.

இந்த சூழ்நிலையில தான் ஊனமாஞ்சேரியில இருக்கற போலீஸ் அகாடமியில 14ஆவது காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது.

முதல்வர் விஜய்
கலந்துகிட்ட இதே விழாவுல உள்துறை செயலாளர் மணிவாசனும் பங்கேற்றாரு. அதுதான் முதல்வரும் உள்துறை செயலாளரும் சந்திச்சுக்கிட்ட கடைசி நிகழ்ச்சி. இதுக்கிடையில சட்டம்- ஒழுங்கு நிலைமையப் பத்தி முதல்வர் தரப்புல இருந்து மணிவாசணிடம் விசாரிக்கப்பட்டதாம்.

அப்போது, ’முதல்வரிடம் சட்டம்-ஒழுங்கைப் பற்றி உடனடியா தகவல் கொடுக்க முடியலை, சந்திக்கறதும் சிரமமா இருக்கு, ஏதாவது நிகழ்ச்சிகள்லதான் முதல்வர்ட்ட நேரடியா பேச முடியுது,’ என்று மணிவாசன் தரப்புல சொல்லப்பட்டதாம்.

இதுல முதல்வர் தரப்பு அப்செட்டாக, ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு நிலவரத்துல திருப்தி இல்லாம இருந்த ஆளும்கட்சி மேலிடத்துக்கு இந்த பதில் அதிருப்திய ஏற்படுத்த இதுக்குப்பிறகுதான் அவரை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாம்.

அதே மாதிரி மின்வெட்டு பிரச்னையிலும் ஆளும்தரப்புக்கு அழுத்தம் ஏற்பட, மின்வாரிய தலைவரா இருந்த அருண்ராயும் மாற்றப்பட்டிருக்காரு, அந்த இடத்துக்கு ராஜேஷ் லக்கானி இப்போ நியமிக்கப்பட்டிருக்காரு.

சட்டம் - ஒழுங்கு மற்றும் மின்வெட்டு பிரச்னையில இன்னும்கூட சில முக்கியமான டிரான்ஸ்ஃபர் உத்தரவு அடுத்தடுத்து வரும்னு ஆளும்கட்சி தரப்புல தகவல் இருக்கு.

Related Link
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பறந்த பரந்தாமன், ராஜினாமா லெட்டர் ரெடியா? கெத்து காட்டும் ஆதவ்

40
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved