news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து - முதல்வர் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

தமிழக வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து - முதல்வர் எச்சரிக்கை

தெருவில் இறங்கி போராடும்...

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீடியோ வெளியிட்ட முதல்வர்
இதுதொடர்பாக, சமூக வலை தள பக்கத்தில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது;
நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா?

இது எச்சரிக்கை...
எந்த ஒரு மாநிலத்துடனும் ஆலோசனை செய்யாமல் தொகுதி மறுவரையறையை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான்; கொள்கையே முக்கியம். நான் முதலமைச்சர் மட்டும் அல்ல, திராவிட பேரியக்கமான திமுகவின் தலைவர். தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது.

தெருவில் இறங்கி போராடும்...
சுயமரியாதைக்காரர்களான எங்களுக்கு கொள்கை தான் முக்கியம். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்போம். மோடிக்கு தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை, என்னுடைய தலைமையில் போராட்டத்தை முன்னெடுப்பேன். இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை மோடி பார்க்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். பாதிக்கப்பட்டால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கி போராடும்.

திரும்பி பார்க்க வைப்போம்

முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். வடமாநிலங்களுக்கு வாரி வழங்குவதைபோல ஏதாவது நடந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தேர்தல் என்பதால் எங்கள் கவனம் தேர்தலில் இருக்கும் கமுக்கமாக தொகுதி மறுவரையறை செய்துவிடலாம் என எண்ணாதீர்கள்.

பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டி இருக்கும். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்போம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்பு

கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோபி நயினார் இயக்கும் படத்திற்கு காலணி என பெயர்

1
26 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved