Also Watch
Read this

வில்வித்தையில் தங்கம்
ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 7வது தங்கத்தை வென்றுள்ளது.
சீன அணியை வீழ்த்தி...
வில்வித்தை காம்பவுண்ட் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா, சிக்கிதா தனிபர்த்தி, பிரத்திகா பிரதீப் அணி பலம் வாய்ந்த சீன அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது

தங்கம், வெள்ளி, வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில் 3 பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அசத்தி உள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம், 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி, மகளிர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved