news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய மக்களவை
tv

Also Watch

வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய மக்களவை

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறை

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய மக்களவை

நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, மக்களவை நடவடிக்கைகள் 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கின.

முதன்முறையாக...
வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டபோது பிரதமர் மோடி, ராகுல் காந்தி என அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

வந்தே மாதரம்' பாடலுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பை வழங்கும் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த சில நாட்களிலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது.

மோடி, அமித்ஷா வருகை
19 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் முதன்முறையாக மக்களவைக்கு வந்தனர். அப்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதம் நடத்தக் கோரிய போது, தேசியப் பாடல் இசைக்கப்பட்டு அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தான் பேசிய பின் மேடையை சுத்தம் செய்வதா? - கார்கே
உத்தரகாண்டில், தாம் பேசி முடித்த பின்பு, பொதுக்கூட்ட மேடை சுத்தம் செய்யப்பட்டதற்கு வேதனை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான மனநிலையை கண்டு மனம் வெதும்புவதாக கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு அந்த இடத்தில் வேள்வி நடத்தியது.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய கார்கே, தாம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகவும், சாதியின் பெயரால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

மன்னிக்க முடியாத குற்றம்
கார்கேவுக்கு நிகழ்ந்த சம்பவம் மன்னிக்கவே முடியாத குற்றம் என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜே.பி. நட்டா, இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுஞ்செயல் என்று கூறியதுடன், இதில் பாஜக உறுப்பினர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாடு பாடநூல் கிடங்கு ஆய்வு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved