news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்தின் விலை உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை உயர்வு

ஒரு கிராம் வெள்ளி ரூ.245

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-23
ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 7 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை, திடீரென 5 ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. விலை உயர்வுக்கு பிறகு, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 670 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கு விற்பனை ஆன வெள்ளி, மீண்டும் 15 ரூபாய் அதிகரித்து 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மார்ச்-24
ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டு, ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
பிற்பகலில் ஒரு சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 13,250 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.

மார்ச்-25
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-26
சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.320 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிலோ வெள்ளி ரூ,2,60,000க்கு விற்பனை ஆனது.

மார்ச்-27 இன்று
சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
23 மார்ச் - ரூ.1,06,720
24 மார்ச் - ரூ.1,06,000
25 மார்ச் - ரூ.1,08,800

26 மார்ச் - ரூ.1,09,360 காலை
26 மார்ச் - ரூ.1,06,800 பிற்பகல்
27 மார்ச் - ரூ.1,07,440 இன்று

Related Link
அண்ணாமலை அப்செட், டெல்லிக்கு மெசேஜ்

அண்ணாமலை அப்செட், டெல்லிக்கு மெசேஜ்

          





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றும், நாளையும் எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

4
3 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved