news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், இறுதிக்கட்டத்தை நோக்கி கால்பந்து போட்டி
tv

Also Watch

tv

Read this

காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், இறுதிக்கட்டத்தை நோக்கி கால்பந்து போட்டி

FIFA WORLD CUP 2026

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2026 FIFA உலக கோப்பை கால்பந்து தொடர், தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில், காலிறுதி போட்டிக்கு 8 அணிகள் முன்னேறி உள்ளது.

ரசிகர்களுக்கு திருவிழா
FIFA WORLD CUP - 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலகத்திலேயே மிகப்பெரிய, அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு கால்பந்து தொடர். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் தங்களோட நாட்டை REPRESENT செய்யும் இந்த FIFA தொடரை, ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர்.

கால்பந்து விளையாட்டின் மகுடமாக கருதப்படும் இந்த உலகக் கோப்பை, உலக மக்கள் தொகையில பாதியளவிலான மக்களை INTERNET, TV முன்னாடி கட்டிப் போட்டு உட்கார வைக்கும் அளவுக்கு POWERFUL CRAZY GAME.

அடுத்தடுத்த போட்டிகளில்...
இந்த முறை AMERICA, MEXICO, CANADA நாடுகளில் இந்த தொடர் நடந்து வருகிறது. இதில், 48 அணிகள் முதல் சுற்றான GROUP STAGEல் மோதினர்.

ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என்று, மொத்தம் 12 GROUPS ஆக இந்த சுற்று நடந்தது. இதில் பிரிவு வாரியாக முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3ஆவது இடத்த பிடித்த சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினர்.

காலிறுதிக்கு முன்னேறவில்லை
பரபரப்பாக நடந்த ROUND OF 32 சுற்றில், NETHERLANDS, GERMANY, CROATIA என்று 16 அணிகள் வெளியேறின. தொடர்ந்து ROUND OF 16 சுற்று ஆட்டங்கள் நடந்தது. இதில், CANADA, PARAGUAY, USA, BRAZIL, PORTUGAL, MEXICO, COLOMBIA, EGYPT அணிகள் வெளியேறின. இந்த தொடரை நடத்தும் AMERICA, CANADA, MEXICO என்று யாருமே காலிறுதிக்கு முன்னேறவில்லை என்பது, பேசு பொருளானது.

அடுத்த போட்டி எப்போது?
FRANCE, MOROCCO, SPAIN, BELGIUM, NORWAY, ENGLAND, ARGENTINA, SWITZERLAND அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த காலிறுதி சுற்றில் இடம் பெற்றிருக்கும் அணிகள் யார் யாரோடு, எப்போது, எங்கே மோதப் போகிறார்கள்?

* ஜூலை 10ஆம் தேதி - அதிகாலை 1.30 மணிக்கு - பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணி

* ஜூலை 11ஆம் தேதி - அதிகாலை 12.30 மணிக்கு - ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணி

* ஜூலை 12ஆம் தேதி - அதிகாலை 2.30 மணிக்கு - நார்வே மற்றும் இங்கிலாந்து அணி

* ஜூலை 13ஆம் தேதி - காலை 6.30 மணிக்கு - அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணி

முன்னேறப்போவது யார்?
இந்த காலிறுதி சுற்றில், வழக்கம்போல் பெரிய அணிகள் தான் வெற்றி பெறும். சிறு அணிகள், அதிரடியாக ஆடி, அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Link
உலகையே அழ வைத்த ரொனால்டோ, அந்த கடைசி நொடி

உலகையே அழ வைத்த ரொனால்டோ, அந்த கடைசி நொடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடக அமைச்சரின் கேள்விக்கு என்ன பதில்? உதயநிதி பதிவு

4
10 mins agoshare
கர்நாடக அமைச்சரின் கேள்விக்கு என்ன பதில்? உதயநிதி பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau