Also Watch
Read this
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், வரும் பொங்கல் விழா முதல் செயல்படுத்தப்படும் என்றும், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி கூடிய அவையின் தொடக்க நிகழ்வாக, கடந்த வாரம் காலமான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் வெளியிட்டு பேசியதாவது;

விலையின்றி 3 சிலிண்டர்கள்
கடந்த 4 மாதங்களாக, வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இதனால் மக்களின் செலவு கூடி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், மக்கள் நலனை பாதுக்காகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்கான செலவழிக்கப்படும் தொகையினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்
எனவே, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில், ’அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் விலையின்றி வழங்கப்படும். இந்தத் திட்டம் பொங்கல் திருநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved