Also Watch
Read this
By: Fyrose Banu

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100-வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பணிகளில் போதிய திட்டமிடல் இல்லை எனவும், டோக்கன் பெற்றிருந்த சிலருக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை எனவும் கூறி சலசலப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் தவெக நகர செயலாளர் ரமேஷ் பேசியதாக கூறப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காணொளியில், திமுக மற்றும் அதிமுகவை ‘குப்பைகள்’ என விமர்சித்துப் பேசிய அவர், அந்த குப்பைகளை மக்கள் அப்புறப்படுத்தி விட்டதாகவும், சில குப்பைகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாகவும் கூறியதாக தெரிகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தையும் ‘மக்காத குப்பை’ மக்கும் குப்பை எனக் குறிப்பிட்டு, அதில் உள்ள குப்பைகள் அனைத்தும் சேர்ந்து பின்னர் தரம் பிரிக்கப்பட்டதாகவும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் நகர செயலாளர் ரமேஷ் பேசியதாக வெளியாகியுள்ள இந்த காணொளி, தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved