Also Watch
Read this

சின்னசாமி மைதானத்தில்...
ஆர்சிபியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால், கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் நெட் ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த 2025 ஐபிஎல் சீசனிலும் 10ஆவது இடத்தை பிடித்த சிஎஸ்கே, இந்த ஆண்டும் அதே நிலையில் நீடிப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய போட்டி
இப்படியான சூழலில் தான் சென்னை அணி இன்று பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் சென்னை அணி உள்ளது. அதேசமயம், இந்த சீசனில் தாங்கள் எதிர்கொண்ட ஒரே போட்டியிலும் மகத்தான வெற்றி பெற்று பெங்களூரு அணி வலுவான நிலையில் உள்ளது. தோனி இல்லாத நிலையில், ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி, ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திருப்புமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனல் பறக்கும்...
ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதுமே அனல் பறக்கும். அதுவும் 2025 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved