news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ‘டேர்டெவில்’ படத்தில் வெங்கடேஷ், மோகன்லால்?
tv

Also Watch

‘டேர்டெவில்’ படத்தில் வெங்கடேஷ், மோகன்லால்?

சினிமா

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ajith 2

அஜித் குமார் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கி, பான்-இந்தியா படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வெங்கடேஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இரு நடிகர்களிடமும் படக்குழு கதையை நேரடியாகச் சொல்லியுள்ளதாகவும், அவர்கள் தங்களது கதாபாத்திரங்கள் மற்றும் கதையால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது அஜித் குமார் தயாரிக்கும் படம் என்பதால், சம்பளம் தொடர்பாக பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும், தற்போது இரு நடிகர்களின் பகுதிகளுக்கான கால்ஷீட் மற்றும் படப்பிடிப்பு தேதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. தங்களது பிஸியான கால்ஷீட்டுக்கு மத்தியிலும் படத்திற்காக தேதிகளை ஒதுக்க இருவரும் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் கதைக்களம் பிரம்மாண்டமான அணுகுமுறைக்கு ஏற்றதாக இருப்பதால், படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக மலையாளம் மற்றும் தெலுங்கு திரையரங்க சந்தைகளில் இப்படத்தின் முன்வெளியீட்டு வியாபாரம் கணிசமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கும் வகையில் பல சர்ப்ரைஸ்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை இணைக்கவும் படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் பரவும் காட்டுத்தீயால் மக்கள் அவதி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved