வங்கப் போரில் இந்திய ராணுவம் 1971 ல் பாகிஸ்தானை வென்றதை குறிக்கும் விஜய் திவஸ் எனப்படும் வெற்றி தினத்தில்,டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.வெற்றி தினம் குறித்து எக்ஸ் தளத்தில் செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,1971 ல் இந்தியா பெற்ற வரலாற்றுபூர்வமான வெற்றிக்கு பங்களிப்பும் உயிர்த்தியாகமும் செய்த வீர ர்களுக்கு நாம் கவுரவம் செலுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். அவர்களின் தியாகம் நமது நாட்டின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளதுடன், என்றென்றும் நமது தலைமுறையினருக்கு உந்து சக்தியாக திகழும் எனவும் மோடி பாராட்டியுள்ளார்.