news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news போலீசிடம் பாதுகாப்பு கேட்டால் கொ*யா? என உதயநிதி கண்டனம்
tv

Also Watch

போலீசிடம் பாதுகாப்பு கேட்டால் கொ*யா? என உதயநிதி கண்டனம்

’CMகிட்ட வேணும்னா போய் சொல்லு’

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொ* மிரட்டல் இருப்பதாக பேட்டி கொடுத்த மறுநாளே திருவொற்றியூரில் ஒருவர் கொ* செய்யப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ’CMகிட்ட வேணும்னா போய் சொல்லு,’ என மிரட்டிய திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதியவும் வலியுறுத்தி உள்ளார்.

திருவொற்றியூர் கொ’
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொ* அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்,’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொ* செய்யப்பட்டு இருக்கிறார்.

காவல்ஆய்வாளர் மிரட்டல்
‘CM-ட்ட வேணும்ன்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது,’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொ*யாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொ* செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

கடும் நடவடிக்கை
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்தது தெரியுமா? ED என்ன பண்ணுச்சு தெரியுமா?’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொ*க்கு என்ன பதில் வைத்திருக்கிறார். இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொ* நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
சிறையில் தனது தாடை உடைக்கப்பட்டது உண்மை என மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

சிறையில் தனது தாடை உடைக்கப்பட்டது உண்மை என மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக தலைமையில் புதுக் கூட்டணி

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved