news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வீரமணி விவகாரத்தில் நடந்த ‘பேரம்’ என்ன?
tv

Also Watch

வீரமணி விவகாரத்தில் நடந்த ‘பேரம்’ என்ன?

நேரடியாக களமிறங்கிய CM விஜய்

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போக்சோ கேஸ்ல ஜெயில்ல இருக்கற ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்துல, போன ஆட்சியில போலீஸ் மூலமா நடந்த பேரம் வெளிச்சத்துக்கு வர, அந்த விவகாரத்துல இருக்கற அரசியல் தொடர்புகளைப் பத்தி முதல்வரே நேரடியா போலீஸ்கிட்ட விசாரிக்க ஆரம்பிச்சிருக்காராம்.

வீரமணி விவகாரத்துல இருக்கற அரசியல் தொடர்புகளைப் பத்துன விசாரணை தீவிரமாயிட்டிருக்காம். முதல்வரே இந்த விவகாரத்தைப் பத்தி காவல்துறைகிட்ட டீடெய்லா கேட்க ஆரம்பிச்சிருக்கறதா சொல்றாங்க. இந்த விவகாரம் ஒரு இன்ஸ்பெக்டர்ல ஆரம்பிக்குதாம். எவ்வளவு பெரிய கேஸ்ன்னாலும் ஒரு இன்ஸ்பெக்டர் நினைச்சா எதுவும் செய்ய முடியும்ங்கறதுக்கு வீரமணி கேஸே உதாரணமா இருக்கு.

வீரமணி மேல போன வருஷம் அக்டோபர்ல விபச்சார தடுப்பு பிரிவு மூலமா வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கு. அப்போ இன்ஸ்பெக்டரா இருந்த மகேஷ் இதை ஹேண்டில் செஞ்சிருக்காரு. இவருக்கு மேல ஒரு பெண் ஏசி இருந்தாலும், கேஸை எப்படியெல்லாம் முடக்க முடியுமோ அப்படியெல்லாம் முடக்கியிருக்காரு இன்ஸ்பெக்டர் மகேஷ். குறிப்பா கேஸ் போட்டு 60 நாட்களுக்குள்ள குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாம, அத நீட்டிக்கறதுக்கான அவகாசத்தையும் நீதிமன்றத்துல தெரிவிக்காம, எந்த ஒரு உத்தரவும் வாங்காம சாக்கு போக்கு சொல்லியே சமாளிச்சு வீரமணி தரப்புக்கு சாதகமா இருந்திருக்காரு.

இந்த நிலையில 2026 ஜனவரியில Airport ஸ்டேஷனுக்கு மகேஷுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வர அதையும் தள்ளிப்போட்டு, வீரமணி கேஸையே க்ளோஸ் பண்ணற வேலைகள்ல தீவிராம இறங்கியிருக்காரு இன்ஸ்பெக்டர் மகேஷ். அந்த சமயத்துலதான் திமுக ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமா இருந்ததா சொல்லப்படுற ரத்திஷ் மூலம் வீரமணி தரப்போட பெரிய லெவல்ல பேரம் பேசப்பட்டதாம்.

இதுல அப்போ இருந்த பல போலீஸ் உயர் அதிகாரிகளும் ஈடுபட பேரமும் படிஞ்சுபோச்சாம். இதுக்குப் பிறகுதான், வழக்குக்கான க்ளோஸர் ரிப்போர்ட் உயர்நீதிமன்றத்துல தாக்கல் செய்யப்பட்டிருக்கு. அந்த ரிப்போர்ட்ல ஒரு வீடியோவையும் தாக்கல் செஞ்சு அதுல இருக்கறது யாருன்னே தெரியலைன்னு சொல்லப்பட்டிருக்கு.

ஆனா எஃப்.ஐ.ஆர்ல குற்றவாளியா வீரமணியோட பேர் இருக்க, அடையாளம் தெரியாதுன்னுட்டு எப்படி இவரை கேஸ்ல சேர்த்தீங்கன்னும், இதுக்காக இப்போ எஃப் ஐ ஆரையே க்ளோஸ் பண்றீங்கன்னும் கேள்வி கேட்டு நிராகரிச்சிடுச்சு நீதிமன்றம்.

விஷயம் என்னன்னா எல்லாத்தையும் ஹேண்டில் செஞ்ச இன்ஸ்பெக்டர் இப்போ, மீனம்பாக்கம் க்ரைம்ல இருக்காராம். ரத்திஷ் உட்பட இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்டவங்க எல்லோருமே சீன்லயே இல்லாத நிலையில, இந்த விவகாரத்துல அப்போ ஏசியா இருந்த ஒரு பெண் அதிகாரி மாட்டிக்கிட்டாங்களாம். அவங்களை சுத்தித்தான் இந்த விவகாரங்கள்ல விசாரணை தீவிரமாயிட்டிருக்காம்.

இந்த சூழ்நிலையிலதான் முதல்வரே இந்த விவகாரத்தைப் பத்தி விசாரிக்க, இப்போ எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துக்கிட்டிருக்காம். ரத்தீஷ் விவகாரத்தை மனசுல வெச்சுதான் அமைச்சர் நிர்மல்குமார் திமுக மேலிடத்தோட வீரமணி விவகாரத்தை முடிச்சுப் போட்டு வெளிப்படையாவே குற்றம்சாட்டத் துவங்கியிருக்காராம்.

Related Link
தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Thar பிரியர்கள் கவனத்திற்கு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved