news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழ்நாட்டின் ஆறு ராஜ்யசபா எம்பிக்கள் யார் யார்?
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டின் ஆறு ராஜ்யசபா எம்பிக்கள் யார் யார்?

அதிமுகவில் யார் யாருக்கு?

58

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் காலி ஆகவுள்ள ஆறு ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் ஆறு ராஜ்யசபா எம்பிக்கள்
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
திமுகவில் இருந்து 2 பேர், அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர், போட்டியின்றி, ராஜ்யசபாவுக்கு செல்ல உள்ளனர்.

மொத்தம் 37 எம்பிக்கள்
தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 ராஜ்யசபா இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று, மார்ச் 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. தமிழகத்தில், காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

திமுக கூட்டணியில் யார் யாருக்கு?
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடமும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அதிமுக தரப்பில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தந்த கட்சிகள் தங்களின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. திமுகவில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிகவில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் கட்சியில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில், திருச்சி சிவா தொடர்ந்து 6ஆவது முறையாக ராஜ்யசபாவுக்கு செல்கிறார். பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக ராஜ்யசபாவுக்கு செல்கின்றனர்.

அதிமுகவில் யார் யாருக்கு?
அதிமுகவில் தம்பிதுரை, காங்கிரஸ் கட்சியில் கிறிஸ்டோபர் திலக், பாமகவில் அன்புமணி போட்டியிடுகின்றனர். தம்பிதுரை 5 முறை லோக்சபா உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் தோல்வியடைந்த நிலையில், 2020ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாமகவின் அன்புமணி 3ஆவது முறையாக தேர்வாகவுள்ளார். இவர் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.

Related Link
காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோஃபர் திலக்

காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோஃபர் திலக்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
2 hrs 24 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved