Also Watch
Read this
பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், கால்பந்து உலகின் தலைசிறந்த அணிகளான அர்ஜெண்டினா மற்றும் இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம எதிரிகளான இரு அணிகளும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு களத்தில் மோதவிருக்கின்றன. மெஸ்ஸி தலைமையிலான நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா உலகக் கோப்பையை தக்க வைக்குமா? அல்லது ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றுமா? யாருக்கு வெற்றி வாய்ப்பு?

நடப்பு சாம்பியன் vs முன்னாள் சாம்பியன்
பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜூலை 16ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில், கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த இரு அணிகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோதுவதால் உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது
1966க்கு பிறகு மீண்டும் உலகக் கோப்பையை கையில் ஏந்தும் இலக்குடன் இங்கிலாந்து அணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. 1962க்கு பிறகு உலகக்கோப்பையை தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையை பெற அர்ஜெண்டினா முனைப்பு காட்டி வருவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

கால்பந்து வரலாற்றில்...
அர்ஜெண்டினா அணி 1978, 1986, 2022 ஆகிய ஆண்டுகள் முறையே 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. Copa América போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அர்ஜெண்டினா அதில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இங்கிலாந்து அணி 1966ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. UEFA Euro கோப்பை தொடரில், 2020 மற்றும் 2024 என தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரண்டாம் பிடித்து ரன்னர் அப் ஆக தேர்வானது. கால்பந்து வரலாற்றில் இரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் இங்கிலாந்து 6 போட்டிகளிலும், அர்ஜெண்டினா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு நாடுகளும் 5 போட்டிகளில் சமன் செய்துள்ளன

இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலம்
உலகக் கோப்பை வரலாற்றை பொறுத்தவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 3 போட்டிகளிலும், அர்ஜென்டினா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதன்முதலாக, 1962 உலகக் கோப்பை குரூப் சுற்றில் இரு அணிகளும் மோதிய நிலையில், அந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. டெக்லன் ரைஸ், ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோரைக் கொண்ட வலுவான நடுக்களம் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் என்பதே, இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலம்.

1966 உலகக் கோப்பைக்குப் பிறகு
புக்காயோ சாகா, அந்தோனி கார்டன் போன்ற வேகமான விங்கர்கள் எதிரணியின் தற்காப்பை எளிதில் உடைக்கக் கூடியவர்கள் என்பதும், கேப்டன் ஹாரி கேன் பந்தை ஹோல்ட் செய்வதிலும், ஏரியல் டூயல்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர் என்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 1966 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி பெரிதாக எந்தவொரு சர்வதேச கோப்பையையும் வெல்லவில்லை. அதுவே அந்த அணிக்கு உளவியல் அழுத்தமாக மாறியுள்ளது.

பலம், பலவீனம்...
அர்ஜென்டினா அணி மிக முக்கிய பலம் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் வியக்கத்தக்க ஆட்டம் தான். உலகக் கோப்பையைத் தக்கவைக்க வேண்டும் என்ற அணியின் கூட்டு முனைப்பும், தேவையான நேரத்தில் கோல் அடிக்கும் திறன் கொண்ட ஜூலியன் அல்வாரெஸ், லௌடாரோ மார்டினெஸ் போன்ற முன்னணி வீரர்களும் அணியின் முக்கிய உந்துசக்தியாக உள்ளனர்.

அர்ஜெண்டினா அணியின் பலவீனம் என்னவென்றால், மெஸ்ஸியின் நகர்வுகள் தடுக்கப்படும்போது அணியின் off-the-ball வேகம் குறைகிறது. டி பால் மற்றும் மெக் அலிஸ்டர் நடுக்களத்தில் பந்தைப் பறிகொடுப்பது எதிரணிக்கு வாய்ப்பாக அமைகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved