news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news Points Tableல் முந்தப் போவது யார்? அனல் பறக்கப்போகும் இன்றைய ஐபிஎல் ஆட்டம்
tv

Also Watch

tv

Read this

Points Tableல் முந்தப் போவது யார்? அனல் பறக்கப்போகும் இன்றைய ஐபிஎல் ஆட்டம்

ipl 2026 RR Vs GT

25

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முக்கிய முன்னேற்றம் காணும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி
IPL 2026 தொடரின் 58ஆவது லீக் போட்டியில் Rajasthan Royals மற்றும் Gujarat Titans அணிகள் இன்று ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டி, புள்ளிப்பட்டியல் மற்றும் Playoff வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் அமைந்துள்ள Sawai Mansingh Stadium மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பதிலடி கொடுக்குமா?
முன்னதாக, இந்த சீசனில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற மோதலில், Rajasthan Royals அணி 20 ஓவர்களில் 210/6 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய Gujarat Titans அணி 204/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 6 ரன்கள் வித்தியாசத்தில் Rajasthan Royals வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் Gujarat Titans அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

தீவிரமாக களமிறங்கும்...
தற்போது இரு அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் உள்ள நிலையில், Rajasthan Royals அணி 4ஆம் இடத்திலும், Gujarat Titans அணி 5ஆம் இடத்திலும் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற இந்தப் போட்டியின் வெற்றி அவசியமானதால், இரு அணிகளும் தீவிரமாக களமிறங்குகின்றன.

அடுத்த கட்ட முன்னேற்றம் யாருக்கு?
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள 2 அணிகள் மோதுவதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பிளேஆஃப் சுற்றை நோக்கி செல்லும் நிலையில், இந்தப் போட்டியின் முடிவு இரு அணிகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்தையும் தீர்மானிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Link
ஃபின் ஆலன் சதம் - டெல்லியை எளிதில் வீழ்த்திய கொல்கத்தா

ஃபின் ஆலன் சதம் - டெல்லியை எளிதில் வீழ்த்திய கொல்கத்தா

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
7 hrs 27 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau