news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் யார் யார்? கடும் போட்டி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் யார் யார்? கடும் போட்டி

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் யார் யார்?

ஆர்சிபி, குஜராத் அணிகள் முதல் இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிளேஆஃப் வாய்ப்புக்காக பிற அணிகள் கடும் போட்டியை சந்தித்துள்ளன.

முதலிடத்தில் RCB
ஐபிஎல் 2026 தொடரின் புள்ளிப்பட்டியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 12 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் GT அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளேஆஃப் இடத்திற்காக கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

இரண்டாவது இடத்தில்...
2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் நிலையில் ஒவ்வொரு போட்டியும் அணிகளின் பிளேஆஃப் கனவை தீர்மானிக்கும் வகையில் மாறியுள்ளது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள ஆர்சிபி அணி +1.053 என்ற சிறந்த நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. அதே அளவு புள்ளிகளை பெற்றிருந்தாலும் +0.551 நெட் ரன் ரேட்டுடன் குஜராத் டைட்டன்ஸ் இரண்டாம் இடத்தில் தொடர்கிறது.

3, 4ஆவது இடங்களில்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சில முக்கிய வெற்றிகளை பெற்றதால் அந்த அணி பிளேஆஃப் வாய்ப்பை பலப்படுத்தி உள்ளது. 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் நான்காவது இடத்தில் இருந்தாலும், சமீபத்திய தோல்விகள் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

முன்னேற்றம் கண்டுள்ள சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறிப்பாக சிஎஸ்கே அணி கடைசி சில போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்னும் பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஆனால், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி அவசியம். மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் கடைசி இரு இடங்களில் தள்ளாடுகின்றன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இன்னும் சில லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் ஒவ்வொரு வெற்றியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Related Link
ஐபிஎல் 2026 கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு 6 விக்கெட்டில் வெற்றி

ஐபிஎல் 2026 கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு 6 விக்கெட்டில் வெற்றி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6 அமைச்சர் பதவிக்கு ஆசை, எடப்பாடி பழனிசாமி கண்டனம்

3
8 mins agoshare
எடப்பாடி பழனிசாமி கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved