news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கோவையில் BJP வைக்கும் குறி, சம்மதிக்குமா ADMK?
tv

Also Watch

கோவையில் BJP வைக்கும் குறி, சம்மதிக்குமா ADMK?

வாக்காளப் பெருமக்களே...

74

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படும் கோவையில் 3 தொகுதிகளை கேட்டு பெறும் முடிவில் பாஜக காய் நகர்த்தி வரும் நிலையில், கோவை வடக்கு தொகுதிக்கு தற்போதே நான்கு திசையிலும், போட்டி கெடுபிடியாகியுள்ளது. கடந்த முறை கோவை தெற்கில் களமிறங்கி கமல்ஹாசனை தோற்கடித்து வெற்றி பெற்ற வானதி ஸ்ரீனிவாசனும், கோவை வடக்கு தொகுதியை
குறி வைத்து வருவதால் களம் இன்னும் சுவாரசியமாகியுள்ளது.

திமுக - அதிமுக இடையே கடும் போட்டி
வருகிற சட்டமன்ற தேர்தலில், கோவையில் யார் கொடி பறக்கும் என திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருவது ஊரறிந்த விஷயம் தான். கடந்த 2021 தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில், இந்த முறை கோவையில் திமுக தனி கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுப்பாளராக போட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், கோவைக்கு என தனி திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் என அறிவித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறது.

3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதிக்குமா?
இந்த சமயத்தில் தான், கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், 3 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையே பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியிருந்தது என்ற நிலையில், இந்த முறை 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, கோவையில் பாஜகவின் RSS அமைப்புகள் வலுவாக இருக்கும் நிலையில், அந்த பலத்தை வைத்து 3 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்திருக்கிறதாம். ஆனால், கோவையில் அதிமுகவும் வலுவாக இருக்கிறது என்பதால் 3 தொகுதிகளை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்குமா? என்பது சந்தேகம் எனவும் சொல்லப்படுகிறது.

கோவை வடக்கு தொகுதிக்கு மாற முடிவு
இது ஒரு பக்கம் இருக்க, கோவை வடக்கு தொகுதிக்கு மட்டும் அதிமுக, திமுகவில் கடும் போட்டி நடந்து வருகிறது. கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதிக்கு மாற முடிவு செய்திருக்கிறாராம். எப்படியும் முன்னாள் அமைச்சர் வேலுமணி சிபாரிசில் கோவை வடக்கு தொகுதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நிர்வாகிகளை வைத்து தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால், அங்கு தான் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.

கோவை வடக்கு தொகுதிக்கு குறி
கடந்த 2021 தேர்தலில் வானதி ஸ்ரீனிவாசனுக்காக தெற்கு தொகுதியில் இருந்து வடக்கு தொகுதிக்கு மாறிய அதிமுகவின் மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன், மீண்டும் தொகுதி மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். அதுமட்டுமல்லாமல், SP வேலுமணியின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சந்திரசேகரும் கோவை வடக்கு தொகுதிக்கு குறி வைத்திருக்கிறாராம். சில நாட்களாக அதிமுகவில் இருந்து விலகி இருந்த வடவள்ளி சந்திரசேகர், எம்.எல்.ஏ. சீட்டு உறுதி என தெரிந்த பின்னர் தான் எஸ்.பி.வேலுமணி முன்பாக கட்சியில் ஐக்கியமானார் எனவும் சொல்லப்படுகிறது.


எஸ்.பி.வேலுமணிக்கே நெருக்கடி
இதனால், கோவை வடக்கு தொகுதியை வானதி ஸ்ரீனிவாசனுக்கு கொடுப்பதா? அல்லது தனது நெருங்கிய ஸ்நேகிதன் சந்திரசேகருக்கு கொடுப்பதா? என எஸ்.பி.வேலுமணிக்கே நெருக்கடியான சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவில் தான் சூழல் இப்படி என்றால் திமுகவிலும் வடக்கு தொகுதிக்கு கடும் கெடுபிடி நிலவுவதாக கூறப்படுகிறது.

கோவை வடக்கு தொகுதிக்கு கிராக்கி
அந்த வகையில், கடந்த முறை போட்டியிட்டு தோல்வியை தழுவிய வடவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறாராம்.

இது தவிர்த்து கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மருதமலை சேனாதிபதியும் கையில் பணத்துடன் தேர்தலில் களம் காண காத்திருக்கிறார் எனவும் சொல்கிறார்கள்.

இவையெல்லாவற்றையும் தாண்டி, கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவராக இருக்கும் கவுன்சிலர் மீனா லோகுவும் கோவை வடக்கு தொகுதியில் களமிறங்க ஆழம் பார்த்து வருகிறார்.

ஏற்கனவே, மேயர் பதவிக்கான ரேஸில் இருந்த மீனா லோகு, வருகிற தேர்தலில் எம்.எல்.ஏ. சீட்டை கைப்பற்ற வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதோடு, தனக்கு தெரிந்த சிபாரிசு மூலமெல்லாம் தலைமைக்கு தூது அனுப்பிவருகிறாராம். இதன் மூலம் கோவை வடக்கு தொகுதிக்கு கிராக்கி எகிறியிருக்கிறது.

Related Link
பூச்சி  தாக்குதலால் மகசூல் இழப்பு

பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved