news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா"
tv

Also Watch

"மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா"

ஒரே பதிவில் விளாசிய அமீர்

167

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக வெற்றி கழகம் சார்பில், இன்று மார்ச் 7ஆம் தேதி, மாமல்லபுரத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், ’மனைவி, மகளை வீட்டில் இருந்து விரட்டி விட்டு மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதாக’ இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.

பெயரைக் குறிப்பிடாமல்...
விஜய் பெயரைக் குறிப்பிடாமல் இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை விரட்டி விட்டு மகளிர் தினவிழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பேசு பொருளான சம்பவம்
தமிழகத்தின் முன்னணி நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரைச் சுற்றி கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் மிகப் பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. விஜய்-ன் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் பயணம் ஆகிய இரண்டையும் இணைத்து, இந்த சர்ச்சை கிளம்பி உள்ளது.

வழக்கு தொடர்ந்த மனைவி
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், விஜய் மனைவி சங்கீதா, லண்டனில் இருந்து சென்னை வந்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக தகவல் பரவியது. அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதுவே பிரிவுக்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. விஜய் தரப்பில் இருந்தோ, அவரது குடும்பத்தில் இருந்தோ, இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

திருமண விழாவில்...
இந்த சர்ச்சைகள் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்ல திருமண வரவேற்பு விழாவில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருவரும் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்திருந்தது, சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது. வதந்தி பரவி வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றியது, "விஜய் தனது உறவை உறுதிப்படுத்துகிறாரா?" என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

இன்று மாமல்லபுரம் நோக்கி...
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், தவெக சார்பில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று மகளிர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தேர்தலை முன்னிட்டு மகளிர் தொடர்புடைய சில முக்கிய தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க உள்ளார்.

Related Link
மகளிர் திட்டங்கள் - தவெக தலைவர் விஜய் அறிவிக்கிறார்

மகளிர் திட்டங்கள் - தவெக தலைவர் விஜய் அறிவிக்கிறார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved