Also Watch
Read this
By: Manigandan Raja

த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எப்போது அழைப்பார் என நினைத்த நிலையில், தற்போது முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருப்பதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை அறிக்கை மீதான பொது விவாதத்தில் பேசிய த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளாக டென்ஷனாக இருந்ததாக கூறியதாகவும், வழக்கை நினைத்து டென்ஷனாக இருந்திருக்கலாம் என கூறியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், கன்னி பேச்சு கண்ணியத்தோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்வதால் உடனுக்குடன் முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும், பிறகு ஆய்வு செய்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என இருக்க வேண்டாம் எனவும், சபாநாயகருக்கு கட்டளை இடுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை சட்டப்பேரவை உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது இருந்தபோதிலும் தகவலாக சொல்கிறேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், தினமும் டென்ஷன் ஆக இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறார், அவர்களுக்கும் சிபிஐ வழக்கு வருமானவரித்துறை சோதனை உள்ளிட்ட டென்ஷன் இருக்கும் என்றார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், எங்கள் முதல்வர் மக்கள் பிரச்சனை குறித்து தினசரி கேட்கிறார் என்பதை தெரிவிக்கவே அவ்வாறு கூறியதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எப்போது பேசுவார் என எண்ணிய நிலையில், தற்போது முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் பிரச்சனை குறித்து செய்தித்தாள்களில் வந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்பதாகவே எங்களுடைய சட்டமன்ற உறுப்பினரும் பேசியதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved