news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews தே.ஜ. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல் இல்லை
tv

Also Watch

tv

Read this

தே.ஜ. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல் இல்லை

Delhi

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EPS 1

தொகுதி பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின்னர், எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலுடன் நாளை பேச்சுவார்த்தை என்றும் இபிஎஸ் கூறி உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வேலைப்பளு இருந்ததால், டெல்லி சென்று பார்த்து பேசியதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லி சென்று ஆலோசனை நடத்தியது குறித்த கேள்விக்கு, இபிஎஸ் விளக்கம் அளித்து உள்ளார்.

நான்கு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது;

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் வெளியிடப்படும்.

தவெக உடன் பேச்சு இல்லை : 

எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. யார் யாருக்கு எந்த எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அதனடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தவெக உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் 31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி. அதிமுக விரைவு ரயில் போல வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

தேர்தலை நோக்கி...

இதுவரை, பிரதமர் மோடி மூன்று முறை தமிழகத்துக்கு வந்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில், மதுரை, மதுராந்தகம், திருச்சி என மூன்று இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மீண்டும் பிரதமர் மோடி, விரைவில் தமிழ்நாட்டு வரவிருக்கிறார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்துவிட்டன. இனி தேர்தலை நோக்கி விரைவாகப் பயணிக்கவு உள்ளோம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Related Link
தேர்தல் அறிவித்த பிறகு நிதி கேட்க முடியுமா?

தேர்தல் அறிவித்த பிறகு நிதி கேட்க முடியுமா?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 48 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved