news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அரவணைத்து போக இபிஎஸ் ரெடி தான், சிவிஎஸ் சிக்னலுக்கு வளைந்த அக்ரி
tv

Also Watch

அரவணைத்து போக இபிஎஸ் ரெடி தான், சிவிஎஸ் சிக்னலுக்கு வளைந்த அக்ரி

பிடிவாதத்தில் இருந்து இறங்கிய இபிஎஸ்?

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

’பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்,’ என்பதுபோல ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த வேலுமணி தரப்பு, இடைத்தேர்தல் தோல்வியால் மீண்டும் கவலைக்கு உள்ளாகியதோடு அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

’அனைவரையும் அரவணைத்து சென்றால் ஒத்துழைப்பு கொடுப்போம்,’ என இபிஎஸ் தரப்புக்கு சிவிஎஸ் சூசகமாக சிக்னல் கொடுக்க, ’அதிமுகவை மீட்க எந்த தியாகத்தையும் இபிஎஸ் செய்ய தயார்,’ என அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் வளைந்து கொடுக்க, இபிஎஸ் இறங்கி வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்திலும் பேச்சு அடிபடுகிறது.

தலைமை மீது அதிருப்தி
2026 சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு, அதிமுகவில் நடக்கும் மனஸ்தாபத்திற்கு மட்டும் முடிவு வந்தபாடில்லை. தவெக ஆட்சியமைத்த நேரத்தில் ஓடிச்சென்று ஆதரவு தெரிவித்து, பின்னர் கட்சித்தாவல் கன்ட்ரோல் காரணமாக என்னதான் ஓரணியாக இணைந்திருந்தாலும் எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு இபிஎஸ் மீது இருக்கும் அதிருப்தி நீளவே செய்கிறது.

பறித்த பதவிகளை இபிஎஸ் கண்ணில் காட்டவில்லை என்ற வருத்தத்திற்கு மத்தியில், இடைத்தேர்தல் முடிவும் பேரிடியாக தலையில் இறங்க, வேலுமணி தரப்புக்கு அதிருப்தி அசைக்க முடியாத ஒன்றாக மாறியது.

வேலுமணி தரப்பு ஆலோசனை
இந்நிலையில், இபிஎஸ் மீது அதிருப்தி மனநிலையில் உள்ள அதிமுகவினர், வேலுமணி வீட்டில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் புதிய கட்சி தொடங்கலாமா? சில ஆப்ஷன்களை பயன்படுத்தி அதிமுகவை மீட்டெடுக்கலாமா? அல்லது மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா போன்று ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் தாவி இடைத்தேர்தலை எதிர்கொள்ளலாமா? என ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

சி.வி.சண்முகம் ஆலோசனை
அப்படியானால், அதிமுகவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட, அது உண்மை தானோ? என்பதுபோல சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு 3 அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். அவர்களுடன் சி.வி.சண்முகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர், வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்ப, ’என் அலுவலகத்திற்கு நான் வந்துள்ளேன். உங்களுக்காகவே அரசியலில் நாங்கள் ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமா? இபிஎஸ் மீது நாங்கள் அதிருப்தியில் இருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே? அதில் என்ன புதுமை உள்ளது?,’ என வழக்கம்போல லேசான புன்னகையுடன் எடக்கு மடக்காக பேசினார்.

ஆனாலும், விடாமல் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இடைத்தேர்தலில் அதிமுக அடைந்தது மோசமான தோல்விதான், வருத்தமாகதான் உள்ளது எனவும் ஆரம்பத்தில் இருந்தே பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறோம் எனக்கூறினார்.

மேலும், மீண்டும் புத்துயிர் கொடுத்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும், அதற்கு அனைவருடனும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அதாவது, தங்களை பேச அழைக்குமாறு இபிஎஸ் தரப்புக்கு சிக்னல் கொடுப்பதுபோன்றே சிவிஎஸ் பேச்சு இருந்தது.

செங்கோட்டையன் பேச்சு
இதுஒருபுறமிருக்க, யானை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல் அதிமுக சென்று கொண்டிருப்பதாகவும், இன்னும் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவிற்கு வருவார்கள் எனவும் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

ஆளுநரிடம் புகார் மனு
இதனை கண்டித்து, ஆளுநர் அர்லேகரிடம் புகார் மனு அளித்துள்ளார் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் என்ற சூழல்தான் தமிழகத்தில் உள்ளது என்றும் அதுதான் தற்போதும் நடந்துள்ளது, தவெகவின் வெற்றி தற்காலிகமானதுதான் அதனை நினைத்து வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லையென தெரிவித்தார்.

தியாகத்திற்கு தயார்
மேலும், சிவிஎஸ் உள்ளிட்டோர் எப்போது வேண்டுமானாலும் இபிஎஸ்ஸை சந்திக்கலாம், தங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லலாம், அவர்களது கருத்துக்களை கேட்க இபிஎஸ் தயாராக இருப்பதாக கூறிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அனைவரையும் அரவணைத்துச் செல்வதே இபிஎஸ் நோக்கம், அவர் உரியநேரத்தில் பொதுக்குழுவை கூட்டுவார், அதிமுக என்ற இயக்கத்தை காப்பாற்ற இபிஎஸ் என்ன தியாகத்தை வேண்டுமானாலும் செய்வார் எனவும் கூறினார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்வதை பார்த்தால் இபிஎஸ் இறங்கி வந்துள்ளார் என்று ரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. அப்படியானால் கூடியவிரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்படும். ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை,’ பாடல் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Related Link
WHAT NEXT? வீராப்பில் வேலுமணி தரப்பு? 
புதிய கட்சியா? அதிமுகவை மீட்க ஆப்ஷனா?

WHAT NEXT? வீராப்பில் வேலுமணி தரப்பு? புதிய கட்சியா? அதிமுகவை மீட்க ஆப்ஷனா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரவணைத்து போக இபிஎஸ் ரெடி தான், சிவிஎஸ் சிக்னலுக்கு வளைந்த அக்ரி

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved