Also Watch
Read this
By: Manigandan Raja

ஏர் பிஸ்டல் போட்டியில் சுர்ஷி சிங்-கமலிஜீத் இணைக்கு தங்கம்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சுர்ஷி சிங்-கலிஜீத் ((Suruchi Singh, Kamaljeet)) அணி, தென் கொரிய அணியை 6.6 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய இணை 484.6 புள்ளிகளும், தென் கொரிய இணை 478.0 புள்ளிகளும் எடுத்தனர்.
இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ்
இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தங்களை சோதித்து பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு என வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி கருத்து தெரிவித்தார். கடந்த 24 ஆண்டுகளாக இந்திய மண்ணில் எந்த தொடரையும் கைப்பற்றியதில்லை என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved