news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டெல்லி அணி சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரானார் அமித் மிஸ்ரா
tv

Also Watch

டெல்லி அணி சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரானார் அமித் மிஸ்ரா

IPL 2027

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்

  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர், 2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் தொடங்கி 16 சீசன்களில் 162 போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
  • டெல்லி அணிக்காக 10 சீசன்களாக விளையாடியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள மிஸ்ரா, கடைசியாக 2024-ம் ஆண்டு சீசனில் விளையாடினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் எடுத்ததின் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
  • இதன் மூலம், 11 ஆயிரம் ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்களில் 3-வது வீரராக இடம் பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங் 13 ஆயிரத்து 378 ரன்களுடன் முதல் இடத்திலும், ஆலன் பார்டர் 11 ஆயிரத்து 174 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். அதாவது, இன்னும் 64 ரன்கள் எடுத்தால், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜோ ரூட், இதுவரை 196 போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்து 936 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 20 சதங்களும் 48 அரைசதங்களும் அடங்கும்.


Related Link
வில்வித்தையில் தங்க வேட்டையைத் தொடரும் ஷீத்தல் தேவி

வில்வித்தையில் தங்க வேட்டையைத் தொடரும் ஷீத்தல் தேவி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved