Also Watch
Read this
By: Manigandan Raja

ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டு போட்டியின் தடகள பிரிவில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே வெள்ளி பதக்கத்தையும், பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பருல் சவுத்ரி வெண்கல பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர்.
கொட்டும் மழையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தை தாண்டினார். அதேபோல், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் பருல் சவுத்ரி 9:08 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்தார்.
ஆசிய விளையாட்டு போட்டியின் நீளம் தாண்டுதல்
ஆசிய விளையாட்டு போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் வெள்ளி பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆன்சி சோஜனுக்கும், சீனாவின் ஹூவான் யிங்யிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஆன்சி தனது 5-வது வாய்ப்பில் 6.53 மீட்டர் நீளம் தாண்டி முன்னிலை பெற்றிருந்தார். அதேசமயம், சீனாவின் யிங்யிங் 6.55 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் அபய் சிங்குக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது சிறப்பான சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved