Also Watch
Read this
By: Manigandan Raja

பல்வேறு பதக்கங்களை குவித்த தமிழக வீரர்- வீராங்கனைகள்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், கமலினி, பாரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன் , ஹரிஹரன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் அமைச்சர் மரிய வில்சன் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் இந்தியா அபாரம்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 97 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். நகோயாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஜப்பானின் நட்சத்திர வீரர் யூரி நகாசடோவை நிதேஷ் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஜப்பான் வீரர் சிறப்பாக செயல்பட்டு 6-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதனால், இந்திய வீரர் நிதேஷ் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியா இதுவரை 10 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களை பெற்றுள்ளது.
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு
தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 2027 அக்டோபர் 7-ம் தேதி எதிர்கொள்கிறது. அக்டோபர் 10-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved